பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130


நீரில் அரிதில் கரையக் கூடிய வளி. குளிர்விக்கும் பொருளாகவும் குறைவெப்பநிலைக் கரைப்பானாகவும் பயன்படுவது.

156. மீத்தைல் ஐசோ சயனேட்டு என்றால் என்ன?

அதிக நச்சுள்ளதும் ஆவியாகக் கூடியதுமான வளி. கார்பனேட்டு நுண்கொல்லிகள் செய்யப் பயன்படுதல்.

157. போபால் துன்பநிகழ்ச்சி என்பது என்ன?

மீத்தைல் ஐசோ சயனேட்டு அது உண்டாகும் நிலையத்திலிருந்து கசிந்ததால் 1984 டிசம்பர் 2இல் போபாலில் 2000க்கு மேற்பட்டோர் இறந்தனர். இதுவே போபால் துன்பநிகழ்ச்சி.

158. மீத்தைல் கிச்சிலி என்றால் என்ன?

காடிச்சாயம். பட்டுச் சாயமேற்றவும் காடிகாரத் தகுதி பார்த்தலில் நிலைகாட்டியாகவும் பயன்படுதல்.

159. மீத்தைல் பாரதியான் என்றால் என்ன?

வெண்ணிறத் திண்மம் பூச்சிக்கொல்லி.

160. மீத்தைல் சிவப்பு என்றால் என்ன?

காடிச்சாயம்.காடி-காரத் தகுதி பார்த்தலில் நிலைகாட்டி

161. வெறியம் (லிக்கர்) என்றால் என்ன?

இனிப்பும் மணமும் ஊட்டப்பெற்ற ஆல்ககால் செய்பொருள். எ-டு. பிராந்தி, ஒயின்.

162. நெராலின் பயன் யாது?

நிறமற்ற நிறைவுறா ஆல்ககால். மணமூட்டும் பொருள்களில் பயன்படுவது.

163. சாண எரிவளி என்றால் என்ன?

சாணத்தை நொதிக்கச் செய்யும்பொழுது தோன்றும் வளி. அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது. சிறந்த எரிபொருள்.

164. மண்ணெண்ணெயின் பயன் யாது?

ஒரு பாரபின் அய்டிரோகார்பன். நீர்ம எரிபொருள், கரைப்பான்.

165. எரிபொருள் என்றால் என்ன?

எரிக்கும்பொழுது வெப்ப ஆற்றலைத் தரும்