பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145


மூலக்கூறு உயிர் இயற்பியல். கொல்லேஜன் என்னும் புரதத்தை ஆராய்ந்து புகழ் பெற்றவர். இவர் சர். சி. வி. இராமனின் மாணாக்கர்.

7. ஆக்சிஜனைக் கண்டறிந்தவர் யார்?

பிரிஸ்ட்லி , 1774.

8. இலவாசியர் பெயரிட்ட வளிகள் யாவை?

ஆக்சிஜன், 1779. ஈலியம், 1786.

9. குளோரின் ஒரு தனிமம் என்று காட்டியவர் யார்?

டேவி, 1810.

10. வெப்ப வேதியியலை நிறுவியவர் யார்?

ஹென்றி ஹெஸ், 1840,

11. ரேடியத்தை கண்டறிந்தவர் யாவர்?

குயூரி தம்பதிகள், 1898.

12. கதிரியக்கம் என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?

மேரி குயூரி, 1898.

13. மேரி குயூரி பிரித்தறிந்த உலோகம் எது?

பொலோனியம், 1898.

14. ஹென்றி மோஸ்லி ஆய்வுகள் உறுதி செய்தது என்ன?

தனிம வரிசை அட்டவணையில் ஓர் ஒழுங்குள்ளது, 1913.

15. ஆஃபினியத் தனிமத்தைக் கண்டறிந்தவர் யாவர்?

டிர்க் காஸ்டர், ஜியார்கி ஹெவிசே, 1923.

16. செயற்கை உலோகங்கள் யாவை?

இவை நாடா போன்ற பலபடிச்சேர்மங்கள். ஆய்வு நிலையில் உள்ளவை. எதிர்காலத்தில் உலோகங்களையும் அரைகுறைக்கடத்திகளையும் மின்னணுக் கருவிகளில் மாற்றிடு செய்ய வல்லவை (1994)

17. மூலக்கூறு உலோகக் கலவைகள் என்றால் என்ன?

கரிம மூலக்கூறுகளிலிருந்து பெறப்படுபவை. நிலை வெப்பக்கருவி ஒன்று இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

18. கூடுகை வேதியியல் என்றால் என்ன?

இது ஒரு நுணுக்கம். மூலக்கூறுகள் வரம்பற்றுச் சேர்வதை அனுமதிப்பது. இதனோடு தொடர்புடையவை கூடுகை

வே.10