பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18




2. பாகியல் பதிவுக் கருவிகள். பாய்ம ஒட்டம், அழுத்தம், வெப்பநிலை ஆகியவற்றை அளப்பவை.
3. நிலைமைகளைக் கட்டுப்படுத்துங் கருவிகள். பருப்பொருள் ஒட்டம், பி.எச். முதலிய நிலைமைகளைக் கட்டுப்படுத்துங்கருவிகள்.

44. தாங்குகரைசல் என்றால் என்ன?

வீறுள்ள காடியையோ படிக மூலியையோ சேர்த்தாலும் பிச் மதிப்பு மாறாத கரைசல். எ-டு. அம்மோனியம் அய்டிராக்சைடு, அம்மோனியம் குளோரைடு.

45. இக்கரைசலின் பயன்கள் யாவை?

1. பிச் மதிப்பை நிலை நிறுத்தும் ஊசி மருந்துகள் செய்ய. 2. தோல் பதனிடும் தொழிலில் பயன்படுதல். 3. உயிரிகளில் தங்கிப் பிஎச் மதிப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு எதிராகப் பாதுகாப்பளிப்பது.

46. பெல்லிங் கரைசல் என்றால் என்ன?

ஆல்டிகைடு (-CHO) தொகுதியைக் கண்டறிப் பயன்படுவது.
3. இயற்பியல் வேதியியல்

1. பகுப்பு என்றால் என்ன?

ஒரு மாதிரியின் பகுதிப்பொருள்களை உறுதி செய்யும் முறை.

2. இதன் வகைகள் யாவை?

பருமனறி பகுப்பு - வினைபடு பொருள்களின் பருமன்களை அளத்தல்.
அளவறிபகுப்பு - ஒரு சேர்மத்தில் இருக்கும் பல தனிமங்களின் அளவை மதிப்பிடுதல்.

3. அளவறிபகுப்பு என்றால் என்ன?

தனிமங்களைக் கண்டறிந்த பின், ஒரு கரிமப் பொருளின் மூலக்கூறு அமைப்பை அறியும் அடுத்த நிலை. செயல் முறை வேதிஇயலின் ஒரு பிரிவு.

4. பண்பறிபகுப்பு என்றால் என்ன?

செயல்முறை வேதிஇயலில் ஒரு பிரிவு. இதன் நோக்கம்