பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


அல்லது 1ஆம்பியர் மின்னோட்டத்தில் 1 வினாடியில் மின்னாற்பகுப்பு மூலம் வெளியேறும் உலோகத்தின் நிறை.

26. அணியமைவு (லேட்டெக்ஸ்) என்றால் என்ன?

புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத்திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் அணியமைவை ஆராயலாம்.

27. அணி அமைவு ஆற்றல் (லேட்டெக்ஸ் எனர்ஜி) என்றால் என்ன?

குறிப்பிட்ட படிகத்தின் ஒரு மோல் அளவை உண்டாக்க முடிவற்ற தொலைவலிருந்து எதிர்மின்னேற்றமுள்ள அயனிகளை ஒரு சேரக்கொண்டு வரும்பொழுது விடுவிக்கப்படும் ஆற்றல். ஒரு வளியிலுள்ள அயனிகளுக்குச் சார்பான நிலையில் ஒரு திண்மப் பொருளின் நிலைப்புத்திறனின் அளவே இவ்வாற்றல்.

28. அயல்வேற்றுருக்கள் என்றால் என்ன?

கெட்டிப் பொருள்களின் வேறுபட்ட இயல்பு வடிவங்கள். எ-டு. கரியின் வேற்றுருக்கள் வைரம், கிராபைட்

29. வேற்றுருமை என்றால் என்ன?

இயற்பண்புகளில் மாறுபட்டுப் பல வடிவங்களில் இருக்கும் ஒரு தனிமம் தன் வேதிப்பண்புகளிலும் மூல அமைப்பிலும் மாறாமல் இருக்கும் இயல்பு. புறவேற்றுமை என்றுங் கூறலாம். எ-டு. சாய்சதுரக்கந்தகம், ஊசி வடிவக்கந்தகம், களிக்கந்தகம்.

30. தொடுவேற்றுருமை என்றால் என்ன?

சில கூழ்மங்கள் பெற்றிருக்கும் பண்பு. குலுக்கும்பொழுது அவை நீர்மமாகும். குலுக்கல் நின்றபின், அவை மீண்டும் படியத் தொடங்கும். எ-டு வண்ணக்குழம்பு.

31. இயக்க அயல் வேற்றுருமை என்றால் என்ன?