பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67



1. உருவமற்ற செந்நிறத்திரள்.

2. உருவமற்ற கறுப்புநிறக் கண்ணாடி போன்ற திரள்.

3. கிச்சிலி சிவப்பு நிறமுள்ள படிகங்கள்.

4. சாம்பல் நிறப் படிகங்கள்.

26. புரோமைடுதாள் என்றால் என்ன?

ஒளிப்படத்தாள். ஒருபக்கம் வெள்ளிப்புரோமைடு பூசப்பட்டு உணர்பகுதியாக இருக்கும். மூலங்களிலிருந்து படி எடுக்கப் பயன்படுகிறது.

27. வெள்ளியின் பயன்கள் யாவை?

பளபளப்பான வெண்ணிற உலோகம், நாணயங்கள், பாண்டங்கள், அணிகலன் முதலியவை செய்யப் பயன்படுவது.

28. வெளிப்புரோமைடின் பயன் யாது?

வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. ஒளிப்படத்தொழிலில் பயன்படுவது.

29. வெள்ளிநைட்ரேட்டின் பயன்கள் யாவை?

சாய்சதுரப்படிகம். சலவையகத்தில் துணிமணிகளுக்குக் குறியிடவும் மயிர்ச்சாயமாகவும் பயன்படுதல்.

30. செதில் வடிவப் பொன் என்றால் என்ன?

படிக வெள்ளியச் சல்பைடு. பளபளக்கும் பொன்னிறச் செதில்களைக் கொண்டது.

31. ஸ்ட்ரான்ஷியத்தின் பயன்கள் யாவை? வெண்ணிற உலோகம். மத்தாப்புத் தொழிலிலும் சர்க்கரையைத் துய்மைப்படுத்தவும் பயன்படுவது.

32. ஆரிகக்குளோரைடு என்றால் என்ன? பொன் (III) குளோரைடு. மின்முலாம் பூசுவதிலும் ஒளிப்படக் கலையிலும் பயன்படுவது.

33. செதில் படிதல் என்றால் என்ன?

கொதிகலன்களில் நீரிலுள்ள கரைந்த கார்பனேட் கரையாத கார்பனேட்டாக கொதிகலன்களில் அடியில் சேறுபோல் படிதல்.

34. இதன் தீமைகள் யாவை? 1. செதில் ஒர் அரிதில் கடத்தி. ஆகவே, எரிபொருள்