பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68


செலவு 2. கலன் உருகல், 3. கலனைச் செதில் அரித்தல்.

35. இவற்றை எவ்வாறு போக்கலாம்? கடினநீரைத் தகுந்த வழியில் மாற்றுதல்.

36. செரியத்தின் பயன் யாது?

இத்தனிமம் உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுகிறது.

37. தாமிரத்தின் பயன்கள் யாவை. அதிகம் பயன்படும் உலோகம். உலோகக்கலவைகள் செய்ய, மின்கலன்கள் அணிகலன்கள் செய்ய, வீட்டுப்பாண்டங்கள் செய்ய.

38. உருக்கு என்றால் என்ன?

தாமிரத் தாதுக்களை உருக்கும்பொழுது இடைநிலையில் கிடைக்கும் பொருள். இரும்பு, செம்பு ஆகியவற்றின் சல்பைடுகள் சேர்ந்த கலவை.

39. தாமிரச் சல்பேட்டின் பயன்கள் யாவை?

பொதுப்பெயர் நீலத்துத்தம். சாயத்தொழிலிலும் மின்முலாம் பூசுதலிலும் மருந்துகள் செய்வதிலும் பயன்படுவது.

40. மயில்துத்தம் என்றால் என்ன?

படிகவடிவச் செம்புச் சல்பேட்டு, பூஞ்சைக்கொல்லி, செம்புமுலாம் பூசப்பயன்படுவது.

41. போர்டோ கலவை என்றால் என்ன? செம்புச் சல்பேட்டும். கால்சியம் ஆக்சைடும் சேர்ந்த கலவை. பூச்சிக்கொல்லி.

42. பேரியம் கார்பனேட்டு என்பது என்ன?

கரையாத வெண்ணிற உப்பு. எலிநஞ்சு.

42. பேரியம் குளோரைடு என்பது என்ன? வெண்ணிறத் திண்ம எலிநஞ்சு, தோல் தொழிலிலும் பயன்படுவது.

43. பேரியம் உணவு என்றால் என்ன?

வாய்வழியாகப் பேரியம் சல்பேட்டை உட்கொளல். இதனால் மேல் இரைப்பை - சிறுகுடல் வழி ஆய்வுக்கு ஏற்றதாகிறது. வேறு பெயர் பேரியக் குடல்கழுவல்.