பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


குழாய்களிலும், ஒளிமின்கலமும் செய்யப் பயன்படுவது.

107. சீசியக் கடிகாரம் என்றால் என்ன?

ஆற்றல் வேறுபாட்டு அடிப்படையில் வேலை செய்யும் அணுக்கடிகாரம். இதில் சீசியம் 133 பயன்படுகிறது.

108. காலமைன் என்றால் என்ன?

துத்தநாகக் கனிமம். தோல்மருந்துகள் செய்யப் பயன்படுவது.

109. நொபிலியத்தின் பயன் யாது?

கதிரியக்க உலோகம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதிலலை. குறுகிய நேரம் இருக்கக்கூடிய பல சேர்மங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

110. இதை இனங்கண்டறிந்தவர் யாவர்?

ஜிராசோ, சீபாக் ஆகிய இருவரும் 1966இல் இதை இனங்கண்டனர்.

111. மாலிப்டினத்தின் பயன்கள் யாவை?

கடின வெண்ணிற உலோகம். உலோகக் கலவைகள் செய்யவும் மின்விளக்கு இழைகள் செய்யவும் பயன்படுவது.

112. மினியம் என்றால் என்ன? பயன் யாது?

சிவப்புக் காரீய (IV) ஆக்சைடு, கண்ணாடி செய்வதிலும் வண்ணநிறமி உண்டாக்குவதிலும் பயன்படுவது. அரிமானத்தைத் தடுப்பது.

113. நியோடைமியம் என்றால் என்ன?

வெள்ளி போன்ற உலோகம். மிஷ் உலோகக் கலவையில் பயன்படுவது.

114. நெப்டூனியம் எப்பொழுது தொகுக்கப்பட்டது?

1940இல் தொகுக்கப்பட்டது.

115. தகடாக்கல் என்றால் என்ன?

உலோகத்தைத் தகடுகளாகஅடித்தல். உலோகப் பண்பு களில் ஒன்று. கம்பியாக்கலும் இதுபோன்ற ஒரு பண்பே.

116. கொபால்ட்டின் பயன்கள் யாவை?

உலோகக் கலவைகள் செய்யவும் மின்முலாம் பூசவும் வெட்டுங்கருவிகளிலும் பயன்படுவது.