பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76



17. சோடியம் தயோ சல்பேட்டின் பயன் யாது?

வெண்ணிறத்திண்மம் ஒளிப்படத் தொழிலில் நிறம் நிறுத்தி.

118. சிலி வெடியுப்பு என்றால் என்ன? பயன்கள் யாவை?

சோடியம் நைட்ரேட் உரம். நைட்ரேட்டுகள் நைட்டிரிகக்காடி ஆகியவற்றின் ஊற்று.

119. ரோசல் உப்பு என்றால் என்ன? அதன் பயன் யாது?

பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட் வெண்ணிறப் படிகம். ரொட்டித் தொழிலில் பயன்படுவது.

120. குளுடாமிகக் காடி என்பது யாது?

நிறமற்ற படிக அமினோக்காடி சோடிய உப்பு வடிவத்தில் மணமூட்டும் பொருள்.

121. ஜிப்சம் என்றால் என்ன?

கால்சியம் சல்பேட். இதிலிருந்து நீர் நீக்கப்படும் பொழுது, பாரிஸ் சாந்து ஆகும். வனை பொருள் தொழில், வண்ணஞ் செய்தல், தாள்செய்தல் முதலிய தொழில்களில் பயன்படுவது. எலும்பு முறிவுக்குக் கட்டுப்போடவும் பயன்படுவது.

122. காண்டியின் பாய்மம் என்றால் என்ன?

கால்சியம் பர்மாங்கனேட், பொட்டாசியம் பர்மாங்கனேட் சேர்ந்த கலவை. புரையத் தடுப்பி.

123. பசுந்துத்தம் என்றால் என்ன?

பெரஸ்-சல்பேட்டுப் படிகம்.

124. சோடா என்பது யாது?

ஒரு வேதிப்பொருள். இருவகை. சோடியம் கார்பனேட்சமையல் சோடா. சோடியம் இரு கார்பனேட்.

125. சோடா என்னும் சொல் வேறு எவற்றைக் குறிக்கிறது?

சோடியம் ஆக்சைடு, சோடியம் அய்டிராக்சைடு.

126. சோடா சாம்பல் என்பது யாது?

நிறமற்ற சோடியம் கார்பனேட்.

127. சலவைச் சோடாவின் வேதிப்பெயர் என்ன?

சோடியம் கார்பனேட் எரி சோடா, கண்ணாடி, சவர்க்காரம் முதலியவை செய்யப் பயன்படுகிறது.