பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85


 214. டைடாட்டினியம் ஈராக்சைடின் பயன்கள் யாவை?

நீரில் கரையா வெண்ணிறத்துள். பீங்கான் பொருள்களுக்கு வெண்மெருகேற்றவும், தாள் தொழிலிலும் நெசவுத் தொழிலிலும் பயன்படுவது.

215. டங்ஸ்டனின் பயன்கள் யாவை?

அரிய மாறுநிலை உலோகம். ஒளிர் விளக்குகள் இழைகள் செய்யவும், உயர்விரைவு எஃகு செய்யவும் பயன்படுவது.

216. டங்ஸ்டன் கார்பைடின் பயன்கள் யாவை?

சாம்பல் நிறத்துள். வைரத்தைப் போன்ற கடினம். தேய்ப்புப் பொருள்கள், கருவிகள் ஆகியவை செய்வதில் பயன்படுபவை.

217. கேலியத்தின் பயன் யாது?

வெண்ணிற உலோகம். நிறமாலை நோக்கிப் பகுப்பு விளக்குகளில் பயன்படுவது.

218. எர்பியம் என்பது யாது?

மென்மையான உலோகம். தகடாக்கலாம். உலோகவியல், கண்ணாடித் தொழில் ஆகியவற்றில் பயன்படுவது.

219. இண்டியம் என்பது யாது?

வெண்ணிற உலோகம். பல்லில் பயன்படும் உலோகக் கலவையிலும் மின்முலாம் பூசுவதிலும் பயன்படுவது.

220. ஐஎன்பி படிகம் என்றால் என்ன?

இண்டியம் பாஸ்பேட் படிகம். கணிப்பொறி முதலிய மின்னணுக் கருவியமைப்புகளில் சிலிகனுக்கு மாற்றாக அமைந்து புரட்சியை உண்டுபண்ண இருப்பது. செயல்திறத்தில் சிலிகானைவிடப் பன்மடங்கு உயர்ந்தது. இந்தியா இதனை உருவாக்கிய எட்டாவது நாடு. சென்னை அண்ணா பல்கலைக்கழகப் படிகவளர்ச்சி தேசிய மையம் இதனை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

221. இரிடியத்தின் பயன்கள் யாவை?

அரிய உலோகம். மூசைகள் செய்யவும், பேனா முட்கள் செய்யவும் பயன்படுவது.