பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87


நீர் உறிஞ்சும் வெண்ணிறமானதும் மென்மையானதுமான திண்மம். மருந்துப் பொருளாகவும், குழல்களைத் துப்புரவு செய்யவும் பயன்படுவது.

232. இங்குலிகம் என்றால் என்ன?

பாதரசத்தின் முதன்மையான தாது.

233. பாதரச மரம் என்றால் என்ன?

சிறிது பாதரசத்தை வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலோடு சேர். மரவளர்ச்சி ஒத்த வெள்ளி இரசக்கலவை உண்டாகும். இதற்குப் பாதரச மரம் என்று பெயர்.

234. இரசக்கலவை என்றால் என்ன?

இரும்பு தவிர்த்த ஏனைய உலோகங்களோடு பாதரசம் சேரும்பொழுது உண்டாகும் கலவை.

235. மெர்க்குரிக அயோடைடின் பயன் யாது?

செந்நிற வீழ்படிவு. தோல் நோய் மருந்துகளில் பயன்படுவது.

236. மெர்க்குரிக ஆக்சைடின் பயன் யாது?

மஞ்சள் நிறத் திண்மம். கண்ணழற்சி மருந்து.

237. பாதரசத்தின் பயன்கள் யாவை?

நீர்மநிலையிலுள்ள உலோகம். வெப்பநிலைமானிகளில் நிரப்பும் நீர்மம். பல் மருத்துவத்தில் பயன்படுவது. புறஊதாக் கதிர்களின் மூலம்.

238. பாதரச் பல்மினேட்டு என்பது என்ன?

இது ஒரு வெடிபொருள். நைட்டிரிகக் காடியில் பாதரசத்தைக் கரைத்து, அதனுடன் ஆல்ககாலையும் சேர்க்க இப்பல்மினேட்டு கிடைக்கும்.

239. பொன் என்றால் என்ன? பயன் யாது?

தங்கம். ஒளிர்வான மஞ்சள் நிற உலோகம். அரசநீர்மத்தில் மட்டுமே கரையும். பல்கட்டவும் உலோகக் கலவை செய்யவும் அணிகலன்கள் செய்யவும் பயன்படுவது.

240. ரேடியத்தின் பயன்கள் யாவை?

இது ஒரு கதிரியக்கத் தனிமம். புற்றுநோய் மருத்துவத்திலும் ஒளிமின்கலம் செய்வதிலும்