பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90


மாறுநிலை அரச உலோகம். விலை மதிப்புள்ளது. ஆஸ்வால்டு முறையில் வினையூக்கி. விலையுயர்ந்த அணிகலன்களில் உலோகக் கலவையாகப் பயன்படுவது.

263. பிளாட்டினக் கறுப்பு என்றால் என்ன?

பிளாட்டினம் கருந்தூளாக்கப்பட்ட நிலை. உறிஞ்சிகளாகவும் வினையூக்கியாகவும் பயன்படுவது.

264. இளக்கி என்றால் என்ன?

1. பற்ற வைப்பில் உலோகப்பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள்.

2. உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கப் பயன்படும் பொருள். எ-டு. இரும்பைப் பிரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்கி.

265. நிறம்நிறுத்தி என்றால் என்ன?

சாயந் தோய்க்கப் பயன்படும் கனிமப்பொருள். எ-டு. அலுமினியம் அய்டிராக்சைடு.

266. உலர்த்திகள் என்றால் என்ன?

வளிகள் முதலிய செய்பொருள்களிலுள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படும் வேதிப்பொருள்கள். எ-டு. அடர்கந்தகக் காடி, கால்சியம் ஆக்சைடு.

267. தொற்றுநீக்கி என்றால் என்ன?

நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப்பொருள். எ-டு. சலவைத்துள்.

268. புகையூட்டி என்றால் என்ன?

புகையூட்ட வளிநிலையில் பயன்படும் வேதிப்பொருள். ஆவியாக்கக் கூடியது. எ-டு. கார்பன் இரு சல்பைடு, எத்திலின். தொற்றுநீக்கி. இம்முறையில் ஆவியைச் செலுத்துவதற்குப் புகையூட்டல் என்று பெயர்.

11. உலோகக் கலவை

1. உலோகக் கலவை என்றால் என்ன?

உலோகம் உலோகத்துடனோ உலோகம் மற்றொரு அலோகத்துடனோ சேர்ந்து உண்டாவது. எ-டு இன்வார், பித்தளை, வெண்கலம்.