பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96


 மிகக் கடினமான கரியின் புறவேற்றுரு. இதன் தூய்மை கேரட்டில் கூறப்படுவது. ஒர் எளிதில் கடத்தி. கண்ணாடியைத் துண்டிக்கவும் அணிகலன்களிலும் (வைரத்தோடு) பயன்படுவது.

13. கேரட்டு என்றால் என்ன?

பொன்னின் துய்மையளவையும் வைரத்தின் எடையளவையும் குறிக்கும் சொல். தூய பொன் 24 கேரட்டு பொன் ஆகும். 14 கேரட் பொன் என்பது அதன் 24 பகுதிகளில் 14 பகுதிகள் செம்பு என்பதும் பொருளாகும்.

14. கார்பரில் என்றால் என்ன?

இது பூச்சிக்கொல்லி ஆகும்.

15. கரி ஈராக்சைடு என்றால் என்ன?

1. இது கரைந்த நீர் சோடாநீர் ஆகும்.

2. தீயணைப்பான், சலவை சோடா செய்யப் பயன்படுவது.

16. கரி இரு சல்பைடு பயன் யாது?

இது அழுகிய முட்டையின் மணம். கரைப்பான், பூச்சிக்கொல்லி,

17. கரி ஓராக்சைடின் இயல்பும் பயனும் யாவை?

நச்சுத் தன்மையுள்ளது. எரிபொருள்.

18. கரி நாற்குளோரைடின் பயன்கள் யாவை?

தீயணைப்பான். கொழுப்பைக் கரைப்பது.

19. நைட்ரோசாக் என்பது என்ன?

கால்சியம் கார்பனேட்டு, அம்மோனியம் நைட்ரேட் சேர்ந்த கலவை. உரம்.

20. நைட்ரஜன் என்றால் என்ன?

ஒரு சிறப்புள்ள வளி. காற்றில் நிரம்ப உள்ளது. தாவரவிலங்கு வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. அம்மோனியம், நைட்டிரிகச் காடி, நைட்டிரைடுகள் முதலியவை உண்டாக்கப் பயன்படும்.

21. நைட்ரஜன் இரு ஆக்சைடின் பயன்கள் யாவை?

ஆக்சிஜன் ஏற்றி. கரிமபடுவினையில் பயன்படுவது.

22. நைட்ரோகிளசரின் பயன்கள் யாவை?

நச்சுத்தன்மையுள்ள எண்ணெய் போன்ற நீர்மம்.