பக்கம்:அறிவியல் விருந்து.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் 115 வெள்ளியையும் அகக்கோள்கள்" என்றும், செவ்வாய் முதல் புளுட்டோ ஈறாகவுள்ள கோள்கள் நமக்கப்பால் அமைந்திருப்பதால் புறக்கோள்கள்’ என்றும் வழங்குவர் வானநூற் புலவர்கள். தற்சமீயம் புவிக்கு அருகில், அதனைச் சுற்றிவரும் அம்புலியைப்பத்தி அதிகம் தெரிந்து கொண்டுள்ளோம். வானவெளியில் புவிக்கு மிக அணித்தாக இருப்பது வான்மதியே. அது பூமிக்குச் சராசரி 3 இலட்சத்து 80 ஆயிரம் கி.மீ. தொலைவிலுள்ளது. பருமனில் மிகச் சிறிய மதிக்கோளம் மணிக்கு 3680 கி.மீ. வீதம் புவியைச் சுற்றுகின்றது. அது பூமிக்கு மிக அண்மையில் வருங்கால் (Perigee) 333390 கி.மீ. தொலைவிலும், மீகச் சேய்மை யில் செல்லுங்கால் (Apogee) 404335 கி.மீ. தொலைவிலும் உள்ளது. புவியைப்போலவே மதிக்கும் சுழற்சியுண்டு. அது பூமியை 273 நாட்களில் ஒருமுறை சுற்றுகின்றது. தன்னையே ஒருமுறை சுற்றிக்கொள்வதற்கும் அதே காலம் ஆகின்றது. மதி பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுதே புவியும் மணிக்கு 107 ஆயிரம் கி.மீ. வேகத்தில் கதிரவனைச் சுற்றி வருகின்றது. இவ்வாறு சுற்றி வரு வதம் த 3854 நாட்கள் ஆகின்றன. புவியும் மணிக்கு 1600 கி.மீ. வேகத்தில் பம்பரம்போல் சுழன்றுகொண்டுள்ளது. மதியின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே உள்ளது. எனவே, நாம் வாழும் புவியில் 8.8 கி. கிராம் எடையுள்ள ஒருவன் மதிமண்டலத்தில் 13.5 கி. கிராம் எடை தான் இருப்பான். இங்கு 4.8 மீ. - உயரம் கம்புத் தாண்டல்" செய்பவன் கதிமண்டலத்தில் 28.8 மீ. உயரம் தாண்டுவான்! - 6, o&#33rrorsair-inner planets, 7. Lyspé@sorso seiz-Oater planets 3. sub-forsåre-o-Pole vault.