பக்கம்:அறிவியல் விருந்து.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஓரிடத்தான்கன் #33 ஆயின், ஏனைய பொன்னைப்போல் அது முற்றிலும் பொன்போல் இருப்பதில்லை. அங்ங்ணமே சோடியத்தின் ஒரிடத்தானும் சோடியமே; ஆனால், அது முற்றிலும் ஏனைய சோடியத்தை ஒத்திருப்பதில்லை. ஆதியில் இயற்கையை ஆராயத் தொடங்கி, ஒரளவு வெற்றி கண்டு, இப்புவியின் அடிப்படையாகவுள்ன 92 பொருள்களுக்கும் "தனிமங்கன்’ என்று பெயர் சூட்டிய கனிதன் தனிப்பட்ட ஒவ்வொரு தனிமத்திலும் அடங்கி புள்ள வெவ்வேறு வகைப் பொருள்களுக்கும் புதிய தொரு பெயர் சூட்ட விழைந்தான். அவன் தேர்ந்தெடுத்த பெயர் ஐசோடோப்பு' என்பது. ஐசோடோப்பு என்பது ஐசோ (iso), டோபாஸ்' (topos) என்ற இரண்டு கிரேக்க சொற்களடங்கிய சொல்லாகும். Iso என்பதற்கு ஒரே (same) என்பது பொருள்; top08 என்பது இடம் (place) என்ற பொருளைத் தருவது. ஃபிரெடெரிக் சாடி' என்ற ஆங்கில அறிவியலறிஞன் தான் முதன் முதலாக இப்பெயரைச் சூட்டினார். தமிழில் நாம் இதனை ஓரிடத்தான் என்று வழங்குவோமாக. சிலர் ஒன்றிவாழிகள் என்றும், வேறு சிலர் சமனிகள் என்றும் வழங்குகின்றனர். அணுவாற்றலின் உடன் விளைவுப் பொருள்களாகக் கிடைப்பவையே இதிரியக்க ஓரிடத்தான்களாகும். கதிரியக்கம் என்ற தத்துவத்தை முதன் முதலில் இவ்வுலகிற்கு அளித்தவர் ஹென்றி பெக்குரல் என்பதையும் அதன் பல்வேறு செயலகனை விளக்கம் செய்தவர் குயூரி தம்பதிகள் என்பதையும் தாம் நன்கு அறிவோம். 4. ஐசோடோப்பு-isotope. 5. 1927 GLífs strą.-Frederick Soddy. 6. offa'ss off-Aston soir-Radioactive isotopes.