பக்கம்:அறிவியல் விருந்து.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 அறிவியல் விருத்து ஓரிடத்தான்களில் இரண்டு வகை உண்டு. அவற்றுள் ஒரு வகை நிலைத்த தன்மையுடையவை. இவற்றின் ஒரு பகுதி சிதைந்தழிந்து நாளடைவில் நிலைத்த தன்மையைப் பெறுகின்றது. மற்றொரு வகை நிலையற்றவை. இவற்றைக் *கதிரியக்கமுள்ள ஓரிடத்தான்கள்’ என்று வழங்குவர். கதிரியக்கமுள்ள தனிமங்களைத் தவிர ஏனைய இயற்கைத் தனிமங்கள் பெரும்பாலானவற்றிலும் முதல் வகையைக் காணலாம். இரண்டாம் வகையை இயற்கையில் காண்பது அரிது. அவை யுரேனியம் போன்ற கனமான தனி ங்ைகளிடத்தில் மட்டிலுந்தான் காணப்பெறும். 1934 விருத்து ஃபிரெடெரிக் ஜோவியட் என்பாரும் அவருடைய துணைவியார் ஐரென் குயூரி அம்மையாரும் செயற்கை முறை கதிரியக்க ஓரிடத்தான்களை உண்டாக்கும் முறை யினைக் கண்டறிந்த பிறகு இவ்வகை ஓரிடத்தான்கள் எண்ணிக்கையில் உயர்ந்தன. அண்மையில் கண்டறியப் பெற்ற அணுஉலைகளின் மூலம் இவற்றின் உற்பத்தி மேலும் பெருகிவிட்டது. இன்றுவரையில் நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்களின் 1300-க்கு மேற்பட்ட ஒரிடத் தான் கவி கண்டறியப்பெற்றுள்ளன. இவற்றுள் 800 கதிரியக்கமுடையவை. அணு ஆராய்ச்சி என்ற நீண்ட தொரு பாதையில் செயற்கைமுறை ஒரிடத்தான்களின் உற்பத்தி பல மைல்கற்களில் ஒன்று என்பதை நாம் அறிதல் வேண்டும். இந்த ஓரிடத்தான்களை அறியவி லறிஞர்கள் மருத்துவ இயல், உழவியல், தோழிலியல் போன்ற துறைகளில் மிகத் திறமையுடன் கையாண்டு வருகின்றனர். கதிரியக்க ஒரிடத்தானின் இரண்டு சிறந்த பண்புகள் தாம் அவற்றைப் பல்வேறு முறைகளில் பல்வேறு துறை களில் பயன்படச் செய்கின்றன. ஒன்று. கதிரியக்க முள்ள ஓரிடத்தான்கள் தாமாகச் சிதைந்து அழிகின்றன.