பக்கம்:அறிவியல் விருந்து.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்விலி டி ஐக் #67 இராயரைப்பற்றி எண்ணாமலே போகின்றது. ஆதிரை வண்டியில் ஏறும் பொழுது எங்குப் போகவேண்டும்?" என்று வினவுகின்றான் வண்டியோட்டி. இராயப்பேட்டை." என்கின்றார் நண்பர். அவருடன் செல்பவர் கிருஷ்ணாம் பேட்டை அன்றோ அலுவலர் உறையும் இடம்?" என்று நினைப்பூட்டுகின்றார். வாய்தவறிச் சொல்லிவிட்டேன்’ என்கின்றார் நண்பர். நண்பர் கிருஷ்ணன்' என்றசொல்லை மறந்ததற்கும் 'இராயர்’ என்ற சொல்லை நினைத்த்தத்தும் காரணம் என்ன? இவையனைத்தும் வாவின் தவறு அன்று என்பதை நாம் நன்கு அறிவோம். இது தனதின் யுளத்தின் திருவிளையாடலே என்பதனை நன்கு உணர் வோம். காஃபி கொடாத கிருஷ்ணனை மறந்து, கா..பி கொடுத்த இராயரை விரும்பி நினைப்பது அவரையும் அறியாது இயங்கும் நனவிலி உள்ளத்தின் செயலாகும், கைதவறி எழுதினேன், வாய்தவறிப் பேசினேன்,' 'நெஞ்சில் இருக்கின்றது; தினைவிற்கு வரவில்லை" என்து கூறும்பொழுதெல்லாம் இத்தகைய கண்கட்டு வேடிக் கையே நிகழ்கின்றது என ...பிராய்ட் என் பார் கணக் சுற்ற உண்மை நிகழ்ச்சிகளைக்கொண்டு தெளிவாக விளக்குவர் அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ அன்ை குடாவிலிருந்து வெப்ப நீரோட்டம் ஒன்று புறப்பட்டு ஐரோப்பாவின் மேற்குக் கரையை வந்து அடைகின்றது. இஃது அட்லாண்டிக் மாபெருங் கடலினுள்ளே மறைத் தோடி வந்து ஐரோப்பாவை அடையும்போதுதான் வெளிப்பட்டுத் தோன்றுகின்றது. அதுபோலவே நாம் பேசும் பேச்சும், செய்யும் செயலும், வேறு பிறவும் இவ்வாறு தனவிலி யுளமாகிய மாபெருங் கடலிடையே மறைந்தோடிப் பின்னர் நணவு உளத்தில் புகுந்து எழுத்து தோன்றுவனவாகும். கம்பராமாயணத்திலிருந்து ஒர் எடுத்துக்காட்டு: இராவணன் தன் மருந்தனைய தங்கை சூர்ப்பனகைவைக்