பக்கம்:அறிவியல் விருந்து.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அறிவியல் விருந்து எஞ்சி நிற்பது அனுத்திரள்ை: மூலக்கூறு” என்றும் இதனை வழங்குவர். அனுத்திரளையையும் வேதியியல் மாற்றத்தின் வழிகோ உடைக்கலாம். அவ்வாறு உடைத்தால் மிஞ்சுவது அனு. இவ்வாறு அனுவாகப் பிரிபவையே உலகத்தின் அடில் படைப் பொருள்கள் அல்லது தனிமங்கள்’ என்று வழங்குவர். பொருள்களை அணு அணுவாக உடைக்கும் பொழுது இந்த உலகில் 92வகையான பொருள்கள் இருக்கக் கண்டனர். ஒவ்வொரு வகைப் பொருளின் அணுவும் ஒவ்வொரு வகையாக இருக்கவும் கண்டனர். இந்த 92 வகைப் பொருள்களும் தம்மோடு தாமும் பிறிதுமாகச் சேர்த்து அனுத்திரளைகள் ஆகின்றன. இப்படிப்பட்ட சேர்க்கைப் பொருள்கள்" உலகில் ஏழு இலட்சத்திற்கு மேலும் உள்ளன என்று அறிவியலறிஞர்கள் கனக்கிட்டுக் கூதுவர். அணு மிகமிகச் சிறியதொரு துகள். அதனைக் கண் னால் காணமுடியாது. அரை கோடி அணுக்களை அணி வகுத்து நிற்க வைத்தால் தாம் எழுதும்போது வைக்கும் ஒரு முற்றுப் புள்ளிக்குள் அவை அடங்கிவிடும். அறிவிய லார் மிகமிகச் சிறிய அணுவின் குறுக்களவினையும் கணக்கிட்டுள்ளனர். ஓர் அங்குனத்தினை இருபத்தைந்து கோடியாகப் பங்கிட்டால் கிடைக்கும் அளவே அணுவின் குறுக்களவாகும் என்று கண்டுள்ளனர். பெரிய அணுவின் இதுக்களவு இதனினும் இரண்டரை மடங்கு பெரிதாகும் அஃதாவது, ஓர் அங்குலத்தினைப் பத்துக்கோடியாகப் பங்கிட்டதில் ஒரு பங்காகும். ஒரு சிறு துகளைப் பார்க்கவும் பேருக்காடிதேடும் நமக்கு அணு எப்படித் தெரியப்போகின் 2. அணுத்திரளை, மூலக்கூறு-Molecule. 3. 35 oiloib-Element. 4. சேர்க்கைப் பொருள்கள்.Compounds.