பக்கம்:அறிவியல் விருந்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அளப்பரிய ஆற்றல் 29 றது. ஆனல் அணுவின் எடை, அதன் அகலம், நீளம், கனம், அமைப்பு, இனம், ஆக்கப்பாடு, அழிவாற்றல் முதலிய அனைத்தையும் அறிவியலறிஞர்கள் அறுதியிட்டுக்கண்டறிந் துள்ளனர்; கணக்கிட்டும் உள்ளனர். இத்தனை விவரங் களையும் அவர்கள் ஆய்வகத்தில் கருவிகளின் துணை கொண்டே அறிந்துள்ளனர். வழக்கில் பயன்படும்பொருள்கள்:இவ்வுலகிலுள்ள பொருன் களில் அடிப்படையானவை 92 என்று கண்டோம். எனினும் வழக்கிலுள்ளவை பன்னிரண்டுக்கு மேல் இல்லை என்பதை அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இது வியப்பினும் வியப்பு. உலகிலுள்ள பொருள்களை ஆயிரம் கூறுகளாகப் பகுத்துக்கொண்டால் ஏறக்குறைய பாதி, அஃதாவது 492 பங்கு உயிரியம். இந்த உயிரியம் காற்றில் ஐந்தில் ஒருபங்கு; நீரில் ஒன்பதில் எட்டுப்பங்கு; இது கல்லிலும் காணப்படும் பொருளாகும் சிலிக்கன் என்பது 25 பங்கு; இது தரையில் நான்கில் ஒரு பங்கு. மணல் எல்லாம் சிலிக்கனோடு உயிரியம் சேர்ந்த சேர்க்கைப் பொருளாகும். அலுமினியம்74 பங்கு. இது களிமண்ணில் அதிகமாகக்காணப்படுவது.இரும்பு47பங்கு இஃது உயிரியத்தோடு சேர்க்கைப் பொருளாகக் கிடைக்கின் றது. கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்து 34 பங்கு, சோடியம் என்ற பொருள் 25 பங்கு; இது சோற்றுப்பில் கானப்படும் பொருளாகும். பொட்டாசியம் 24 பங்கு:இஃது அபிரேகம்’ முதலியவற்றில் உள்ளது. மக்னீசியம் 19 பங்கு; இஃது கடல்நீரிலும் உண்டு. பெட்ரோமாக்ஸ் விளக்கில் திரி யாக எரிவதற்கு வெள்ளைச் சல்லடைபோல் உறையாகப் போடப்பட்டிருப்பது இப்பொருளே. நீரியம்9 பங்கு; இது நீரில் உள்ளது; நீரில் ஒன்பதில் ஒருபங்கு இப்பொருளே. 5. அபிரேகம்-Mica. அ-2