பக்கம்:அறிவியல் விருந்து.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் ஆளப்பரிய ஆற்றல் 43 தன்மையுமே ஆகும். எனவே, குடிவழியாகப் பெறும் பண்புக் கூறுகளும், பிறவியிலே யமைந்த இயற்கைப் பேறுமே ஒரு குழந்தையின் ஒழுக்கம், நடத்தை, ஆளுமை ஆகியவற்றை இறுதியாக அறுதியிடுகின்றன என்று வற்புறுத்துவர். விரை யொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா?’ என் பது இவர்கள் விடுக்கும் வினா. இதைச் சரியென ஒப்புக் கொண்டால் பள்ளியில் தாம் பெறும் பயிற்சியும் ஆசிரியர் மேற்கொள்ளும் முயற்சியும் வீண் என்று கொள்ள வேண்டிய தாக முடியும். சூழ்நிலைக் கட்சியினர் கூறுவது: உளவியல் முறைப் படி சூழ்நிலை என்பது ஒருவன் கருவாகியது முதல் காலன் கவ்வும்வரை பெற்றுள்ள தொகுதிகளாகும். உணவு, வளர்க்கும் முறை, கல்வி, பட்டறிவு முதலியவை எல்லாம் இதனுள் அடங்கும். சுரப்பிகளால்" ஏற்படும் மாறுதல் களைக்கூட சிலர் சூழ்நிலையுடன் சேர்த்துப் பேசுவர். சூழ் நிலையைப்பற்றிய இக்கூறிய கருத்து செயல்திறன் வாய்ந் தது. ஒரு பொருள் முன்னே நிற்பதால் மாத்திரம் சூழ்நிலை யாகிவிட முடியாது. அஃது ஒருவரைத் தூண்டினால்தான் சூழ்நிலையாகும். அஃதாவது, ஒருவரின் உடலுக்குப் புறம் பேயுள்ள, ஆனால் அவரது புலன்களின் எல்லைக்குள் இருக்கும், எல்லாப் பொருள்களும் விசைகளும் அடங்கிய தொகுதியே சூழ்நிலை என்பது. சூழ்நிலையைப்பற்றிய இவ்விலக்கணம் இதனைப்பற்றிப் பொதுமக்கள் கொண் டுள்ள கருத்தைவிட மிகப் பரந்தது. வாழ்க்கைச் சுழற்சி யிலுள்ள எவ்வகைத் துரண்டல்களும் இதனுள் அடங்கு கின்றன. 6. #prou#45 or-Giands. 7. விசைகள்:Forces .