பக்கம்:அறிவியல் விருந்து.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 51 வழியாகக் கிடைக்கும் என்று எண்ணுவது சிறிதும் பொருத தாது. கணக்கற்ற தலைமுறைகளில் பல்லாயிரம் யாண்டு களின் பழக்கத்தால் பல பண்புகள் குடிவழியாகக் கிடைக் கின்றன என்று கருதுவதில் ஒரளவு பொருத்தம் இருக்கலாம். இதனை மறந்து கணித ஆசிரியரின் மகன் கணிதத்தில் திறமையாளனாக இருப்பான் என்றோ, வரலாற்று ஆசிரி யரின் மகன் அறிவியல் வல்லுநனாக ஆக முடியாது என்றோ கருதுவது தவறு. ‘குலவித்தை கல்லாமல் பாகம் பாடும்" என்ற மேற்கோளுக்கு உளவியல் கருத்துப்படி சிறிதும் பொருள் இல்லை. அப்படி ஏதாவது குலவித்தையை ஒருவன் கற்றாலும் அது சூழ்நிலையால் பெற்றதே பன்றி குடிவழியால் பெற்றதன்று என்பது அறியத் தக்கது. குடிவழி ஒருவருக்குச் சாத்தியமாகக் கூடிய கூறு களைக் குறிக்கின்றது; சூழ்நிலை அவற்றைச் சிறந்த முறையில் வளர்க்கும் வாய்ப்பினைத் தருகின்றது; அவ்வளவுதான். சூழ்நிலை மனிதனை ஆக்குகின்றது; மனிதனும் சில சமயம் சூழ்நிலையை ஆக்குகின்றான். வள்ளல் டாக்டர் அழகப்பரின் வாழ்க்கையும் அறிவியல் மேதை சர், சி. வி. இராமனின் வாழ்க்கையும் இவற்றிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமையலாம். வள்ளல் டாக்டர் அழகப்பர் வெறும் ஆலை முதலாளியாக மட்டிலும் இருந்து கல்வி நிலையங்களை ஏற்படுத்தியிரா விட்டால் கல்வித்துறையில் இவ்வளவு சேவை செய் திருக்க முடியாது; வள்ளலாகவும் மலர்ந்திருக்க முடியாது. கணக்குத் துறையில் பணியாற்றிய சர். சி. வி. இராமனுக்கு அச்சூழ்நிலை சிறிதும் பொருந்தவில்லை. அவர் இயற்பியல் (Physics) ஆய்வகத் திற்கு வந்ததும் அச்சூழ்நிலை அவரைத் தக்க முறையில் தூண்டி அறிவியல் மேதையாக்கியது. ஆனால், பொருளா தாரத்துறையில் அதிக நாள் பணியாற்றி சர். ஆர். கே.