பக்கம்:அறிவியல் விருந்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ அறிவியல் விருந்து தேவையே இல்லை மின்னணுக்கள் பொருள்களுக்கியிைட லுள்ள வெளிப் பரப்பிலேயே தாவிச் செல்லும்; இங்ங்கrம் தாவிச் செல்லுங்கால் ஒரு மின் பொறியை விளைவிக்கும். இப்பொழுது நாம் மின்னணுக்களைப் பார்ப்பதில்லை; மின்னூட்டமுள்ள துகள்கள் பறந்து செல்லும்பொழுது இடையிலுள்ள காற்றே இம்மாதிரிப் பளிச்சிடச் செய்யப் படுகின்றது. இச்செயலைக் கருத்திற் கொண்டு மின்னல் ஏற்படுவதை நோக்குவோம். உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடிமழை தோன்று தல் கூடும். ஆனால், வெப்ப நாடுகளில் உயரமான மலை களிலும் இஃது அதிகமாக இருக்கும். ஆண்டில் இருநூறு தாட்கள் வரை இடிமழை பெய்யும் இடங்களும் உள்ளன. இந்தியாவில் பருவ மழையின் முன்னரும் இவ்வினைவு ாதாரணமாகத் தோன்றுகின்றது. இடி மழை தோன்றுங் கால் இடிமேகம் முழுவதும் மின்னேற்றமடைகிறது ஓர் இடிமேகத்தில் எண்ணற்ற நீர் த் து வரி க ள் உள்ளன : ஒவ்வொரு துளிவும் நேர்மின்னுாட்டத்தையோ அல்லது எதிர் மின்னூட்டத்தையோ கொண்டிருக்கும், எதிர்மின் லூட்டம் பெற்ற துளிகள் மேகத்தின் அடிப்புறமாகத் திரளும் தன்மையுடையவை; நேர் மின்னுாட்டம் பெற்ற துளிகள் மேற்புறத்தில் திரளுகின்றன. மாறுபட்ட மின் ஆாட்டங்கள் ஒன்றையொன்று கவரும் என்பதை நாம் அறிவோம். மேகத்தின் கீழுள்ள எதிர் மின்னூட்டங்கள் கீழே தரையிலுள்ள நேர் மின்னுாட்டத்தைக் கவருகின் றன. இறுதியாக, மேகத்திலுள்ள எதிர் மின்னுாட்டங்கள் ஒரு சமயத்தில் மிக அதிகமாகத் திரண்டு அவை மேகத் திற்கும், பூமிக்கும் இடையிலுள்ள வெளிப்பரபபில் பாய் கின்றன. இங்ங்ணம் நேரிடுங்கால் காற்று சூடாக்கப் 8. Goio.op-Thunder storm. 9, 34.3 pestà-Thunder cloud.