பக்கம்:அறிவியல் விருந்து.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலும் இடியும் §§ என்று வழங்கப்பெறுகின்றது. இஃது ஒர் உறுதியான கம்பியிலானது; இதன் உச்சி கட்டடத்தின் உச்சிப் பகுதிக்குமேல சற்று நீண்டும், அடிப்பகுதி ஒரு தாமிரத் தகட்டுடன் பற்றவைக்கப்பெற்றுப் பூமியினுள் ஈரமான இடத்தில் புதைக்கப்பெற்றும் இருக்கும். இச்சாதனம் கட்டடத்திற்கு எவ்வகைக் கேடும் ஏற்படாமலேயே மின்னாற்றலைப் பூமிக்குள் செலுத்திவிடுகின்றது. பல உலோகத்துரண்களுள்ள பெரிய கட்ட-காயின், ஒவ்வொரு துணையும் இடிதாங்கியுடன் இணைத்திடல் வேண்டும்; பல தரை அமைப்புகளையும் அமைத்திடல் வேண்டும். இரும்புச் சட்டத்தால் இயன்ற கட்டடம் இடிமழை நேரிடும்போது பாதுகாப்பாக அமைகின்றது. அதன் மீது தாக்கப்பெறும் மின்னல் இரும்புச் சட்டத்தின் வழியாகப் பூமியினுள் பாய்ந்துவிடுவதால் கட்டடத்தினுள்ளிருக்கும் மக்களை அது தாக்குவதில்லை. இத்தகைய கட்டடம் மிக உயரமானதால் இருப்பின் அது தன் அருகிலுள்ள வேறு சிறு கட்டடங்களையும் பாதுகாக்கும் சாதனமாக அமைத்து விடுகின்றது. மின்னலால் சிலசமயம் பல நன்மைகள் விளைகின்றன. அது தாவரங்கள் வளர்வதற்கு வேண்டிய உணவினை விளைவிக்கின்றது. தாவரங்கட்கு நைட்ரஜன் தேவை. இது வேர்கள்மூலம் நைட்ரேட் உப்புகள் வடிவத்தில் தாவரங்கட்குக் கிடைக்கின்றன. காற்றில் ஏராளமான நைட்ரஜன் உள்ளது. அதனை வேறு தனிமங்களுடன் சேரச் செய்து விலையுயர்ந்த நைட்ரேட் உப்புகளாகச் செய்யப்பெறாதவரை அது தாவரங்கட்குப் பயன்படாது. அங்ஙனம் செயற்கை முறையில் நைட்ரஜனை நைட்ரேட் உப்புகளாகச் செய்வது எளிதான செயலன்று. ஒவ்வொரு மின்வெட்டு உண்டாகும் போழுதும் ஒரு சிறு அளவு நைட்ரஜன் காற்றிலுள்ள உயிரியத்துடன் சேர்கின்றது;