பக்கம்:அறிவியல் விருந்து.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் கிடக்கின்றது. இந்த ஒளிமுடிக்கும் கதிரவனின் மேற்பரப் புக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கதிரவன் தன்னைத்தா னே சுற்றிக்கொள்ளும்பொழுது இவ் வொளிமுடி சுழலாமல் நிலைத்து நிற்பதால் இதனை அறிகின்றோம். இந்த ஒளி முடியில் மிகமிக நுண்ணிய அணுத்திரளைகளும், மின் சாரம் ஏற்றப்பெற்ற துகள்களும் அருவியிட்டோடுகின்றன. இவற்றின் மூலம் வால்மீன்கள் தங்குத்தடையின்றி ஒடு கின்றன. இரண்டாம் புரை ஒளி முடிக்கு அடுத்து உள்ளே காணப்படுவது; இது நிறப்புரை' யாகும். இது செக்கச் செவேரென்று செவ்வாணம்போல் செந்நிறத்துடன் திகழும் ஒரு வாயுமண்டலம். இதன் ஆழம் ஐயாயிரம் மைல், இதனுள் எப்போதும் சுண்ணம், நீரியம் ஆகியவை சூரியனுடைய கனல் வாய்ப்பட்டுக் கொதிப்பேறிக் கொந் தளித்துக் கொண்டுள்ளன. சிற்சில சமயங்களில் எரியும் நீரியத்தாலான சிவந்த தணற் கொழுந்துகள்" நோடிக்கு 800 மைல் வேகத்தில் 50,00,000 மைல் உயரம் வரையில் மேலெழுகின்றன. மூன்றாம் புரை தலைகீழ்ப்புரை' யாகும். இது நிறப்புரைக்குள் காணப்பெறுகின்றது. இதன் ஆழம் 10.0 மைல். ஒளி வண்ணக் காட்சியில் இது மாறுபட்ட நிலைகளைக் காட்டுகின்றது. நான்காவது ஒளிப்புரை யாகும். இதுதான் பகலவனின் உண்மைப் பிழம்பாகும். இங்கிருந்துதான் ஒளிக்கதிர்களும் கனற்கதிர்களும் பிறக் கின்றன. இவ்வொளிப் பிழம்பினை நேரில் காணின், கண்கள் கரிந்து விடும். சூரியனது உருவத்தில் அடிக்கடிக்கரும்புள்ளிகள் காணப் பெறுகின்றன. மெருகிட்ட வெள்ளித் தட்டில் மையைத் 5. #ì890t jø!r-Chromosphere. 6. Een bG Er gips5gassir-Prominances. 7. Es 60&yptil jsoir-inverse sphere. 3. geftisjsor-Photophere