பக்கம்:அறிவியல் விருந்து.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 77 மின்னாமல் நிலைநின் றொளிர்வதை அறிகின்றோம். இது கதிரவனுக்கும் பூமிக்கும் இடையே மேலோ கீழோ வரும் தருணங்களில்தான் நமக்குத் தன் காட்சியை நல்குகின்றது. பூமியை 116 நாட்களுக் கொருமுறை இது கடந்து செல்லு கின்றது. இது பகலவனிடமிருந்து சராசரி 3,60,00,000 கல் தொலைவிலுள்ளது; அஃது உச்சத்தில் 4 கோடி 30 இலட்சம் கல்லும் நீச்சத்தில் 5 கோடி 80 இலட்சம் கல்லும் உள்ளது. இவ்வளவு தூரமும் வானத்தில் ஒரு முழம்போலத் தோன்றும். இதன் குறுக்களவு மூவா யிரம் கல் என்று கணக்கிட்டுள்ளனர். இதன் மேற்பரப்பு பூமியின் மேற்பரப்பில் ஏழில் ஒரு பங்கு; பூமியின் நிலையில் இதன் நிலை இருப்பது மூன்றில் ஒரு பங்கு. இதன் திண்மை நீரின் திண்மையைவிட நாலரை ம.க்கு அதிகமாக உள்ளது. இதன் மேற்பரப்பில் பொருட் க:ர்ச்சி விசை பூமியின் மேற்பரப்பிலுள்ளதைப்போல் மூன்றில் ஒரு பங்கே உள்ளது. எனவே, பூமியில் 13 பவுண்டு எடையுள்ள மனிதன் புதனில் 50 பவுண்டு எடைதான் இருப்பான்; இங்கு ஐந்து அடி உயரம் தாண்டக்கூடிய ஆள் புதனில் பதினைந்து அடி உயரம் தாண்டுவான். புதன் கதிரவனைச் சுற்றி ஒரே வேகத்துடன் ஒடி வரவில்லை. சூரியனுக்கு அண்மையில் இருக்கும்பொழுது விநாடிக்கு முப்பத்தாறு கல் வேகத்துடனும், சேய்மையில் செல்லும்பொழுது விநாடிக்கு இருபத்தாறு மைல் வேகத்துடனும் ஓடிவரு கின்றது. புதனின் விடுபடு நேர்வேகம்" பூமியின் விடுபடு நேர் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (1; கல்) ஆகும். 19. Eí?GLIG GÆ ff& ar&th-Bscape velocity. $g பொருள் மேலே தூக்கி எறியப்பெற்றால், அது பூகவர்ச்சி விசையினின்றும் விடுபட்டு வானவெளியில் பறந்து சென்றுவிடும். ஒரு பொருளைக் கவர்ச்சியினின்றும் விடு விக்கும் வேகமே விடுபடு தேர்வேகம்’ என்பது. ஆ-5