பக்கம்:அறிவியல் விருந்து.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? அறிவியல் விருந்து குறைந்தே தோன்றும். பூமியிலிருந்து வெள்ளி அதன் அதிக எல்லைத் தொலைவிலிருக்கும் பொழுது வெள்ளிக்கும் பூமிக் கும் இடையே கதிரவன் வருகின்றான். ஆனால் சுக்கிரனை யும் பூமியையும் சேர்க்கும் நேர்க்கோட்டில் கதிரவன் இருப் பதில்லை. இந்நிலையில் சுக்கிரன் எழுங்கால் கதிரவன் மறைந்திருக்கும். மேலும் இந்நிலையில் இதன் மீது கதி ரவன் ஒளி விழும் பகுதி நம்மை நோக்கி இருக்கும். இவ் வொளி முழுவதும் நாம் இருக்கும் திசையில் பிரதிபலிக்கப் பெறுகின்றது. இவ்வெல்லையைக் கடந்த பின் ைt வெள்ளிக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் குறையத் தொடங்கும். இந்நிலையில் சுக்கிரன்மீது சூரிய ஒளி விழும் பகுதியும் குறைந்துகொண்டே வரும். எனவே, திங்களைப் போல் இதுவும் வளர்பிறை, தேய்பிறைத் தோற்றங்களுடன் தமக்குப் புலனாகின்றது. இவற்றைத் தொலை நோக்கி யின் மூலமாகவே பார்க்கலாம். இக்கோளை மப்புமூடியவாயுமண்டலம்கப்பிக்கிடைத்த கால் இதன் உண்மையான தோற்றத்தைத் தொல்லை நோக்கியைக் கொண்டும் காணமுடியவில்லை. இக்கோளி விருந்து வீசும் கதிர்களை நிறமாலை மானியைக்' கொண்டு சோதித்ததில் அவற்றில் சிறிதளவேனும் உயிரியம்" இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கரிய மில வாயு மலிந்து இருப்பதாகத் தெரிகின்றது. ஆகவே, இன்னும் இக்கோளில் உயிர் வகைகன் தோன்றவில்லை என்று கருதவேண்டியுள்ளது. இன்னொரு மெய்ம்மை பும் இதனை உறுதிப்படுத்துகின்றது. பூமியைவிட வெள்ளி கதிரவனுக்கணித்தாக இருப்பதால் இங்குக் கதிரவனின் வெப்பம் அதிகமாகத் தாக்குகின்றது. கரியமிலவாயு கலந்துள்ள வாயு மண்டலத்தை ஊடுருவி வெப்பக் கதிர்கள் 24. £pubtropoulon-sh-Spectroscope. 35. awāiffulb. Oxygen -