பக்கம்:அறிவியல் விருந்து.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் யாகத் தோன்றும் இடங்கள் தாவரங்களாக இருக்கலாம் என்பதும், இதில் தோன்றும் வரிகள் பெரிய கால்வாப் சளாக இருக்கலாம் என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. பூமியைவிட அதிகத் தொலைவில் இக் கோள் கதிரவனைச் சுற்றி வருவதால் இது பெறும் சூரிய வெப்பம் மிகக் குறைவு. இங்கு நடுப்பகுதிகளில் நண்பகலில் உள்ள வெப்பத்தின் அளவு 50°F. கோடைவாச இடங்களில் இரவிலிருக்கும் வெப்பத்தின் அளவுதான் இது! இரவின் குளிர் -135°F என்று தெரிகின்றது. காற்றில் கலந்துள்ள உயிரியம் பாலைவனங்களிலுள்ள இரும்பு மூலத்துடன் அதிக அளவில் கலந்து துருவாக மாறி செந்நிறம் எய்தியுள்ளது. இதுவே இக் கோள் செந்நிறமாகத் தோன்றுவதற்குக் காரணமாகும். இம்மண்டலத்தில் அறிவு வளர்ச்சியின் கொடுமுடியை எட்டியுள்ள மக்கள் சமூகம் வாழ்வதாகக் கருதப்பெறுகின்றது. செவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளன. இவை இரண்டும் இரவில் தன்னொளி பரப்பியும், பகலில் கதிரவனது புன்முறுவலை யொத்தாற்போன்று புன்னகை புரிந்தும் திரிந்து வருகின்றன. இவ்விரண்டு துணைக் கோள்களுக்கும் டைமாஸ்,’’ ஃபோபஸ் என்று மார்ஸ் என்ற போர்க்கடவுளின் குதிரைகளின் பெயர்களையே இட்டு வழங்குகின்றனர். டைமாஸின் குறுக்களவு 10 மைல். இது செவ்வாய்க்கு 14 ஆயிரம் மைல் தொலைவில் சுற்று கின்றது; இஃது ஒருமுறை செவ்வாயைச் சுற்றிவர 30 மணி 18 மணித்துளிகள் ஆகின்றன. மற்றொன்றாகியஃபோபஸின் குறுக்களவு 35 மைல். இது 7 மணி 39 மணித்துளி 23 விநாடி களில் செவ்வாயை ஒருமுறை வலம் வருகின்றது. செவ்னாய் ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதற்குள் 34, opt-upmo-Deimos. 35, 3%Guirt so-Phobos,