பக்கம்:அறிவியல் விருந்து.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo அறிவியல் விருந்து சனிக்கோளைச் சுற்றி வந்த ஒரு துணைக்கோளின் சிதைவினால் இவ்வளையங்கள் ஏற்பட்டிருத்தல் கூடும் என்று கருதுகின்றனர். ஒரு கோளைச் சுற்றி அதன் துணைக் கோள் ஓடி வருங்கால் துணைக்கோளின்மீது செயற்படும் கோளின் கவர்ச்சி ஆற்றல் ஒரே அளவாக இருப்பதில்லை. துணைக்கோள் மிக நெருங்கியிருக்குங்கால் இக் கவர்ச்சி ஆற்றல் அதிகமாகவும், தொலைவிலிருக்கும்பொழுது இது குறைவாகவும் இருக்கும். மேலும், மிக நெருங்கி இருக்கும் போதும் இவ்வாற்றலின் வலிமை துணைக்கோளின் மேற் பரப்பு முழுவதும் ஒன்றாக இராது. திண்மை வாய்ந்த கோளொன்றினைச் சுற்றி வரும் துணைக்கோள் மண்டலத் தின் குறுக்களவு கோளின் குறுக்களவில் ஐந்து மடங்கிற்குக் குறைவாக இருக்குமாயின் துணைக்கோள் துண்டு துண்டாகச் சிதறிவிடும் என்பதை ரோக்கே’’ என்பார் மே ப்பித்தார். சனிக்கோளின் வெளி விளிம்பின் விட்டம் சனியின் விட்டத்தில் ஐந்து மடங்கே உள்ளது. எனவே, நெடுநாள் முன்னர் சனியைச் சுற்றிவந்த துணைக்கோள் இவ் வளையங்கட்கு அப்பால் சுழன்று வருவதனால் இக் கருத்து உறுதிப்படுகின்றது. சனிக் கோளுக்கும் வியாழனைப்போல் ஒன்பது துணைக்கோள்கள் உள்ளன. இவற்றுள் மூன்றனை வியாழனுடைய துணைக் கோள்களுள் பெரியனவாகிய மூன்றுடன் ஒப்பிடலாம். இத் துணைக்கோளுள் மிகப் பெரியது. டைட்டன்" என்பது. இதன் விட்டம் 2 , 500 மைல்; நமது திங்களைவிடப் பெரியது. பரிமாணத்தில் டைட்டனுக்கு அடுத்தபடியாக இருப்பவை ரீயா,** ஐயாயிடஸ்' என்பவை, இவை இரண்டும் நமது அம்புவியில் 44. Gorrão - Roche. 45, oil-rol or - Titan. 46. fair-Rhea. #7. &urrël-cis-Iapetus.