பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

19



அனுபவ அறிவு

பாட்டன் அறிவு, தந்தைக்கும், தந்தை அறிவு மகனுக்கும், மகன் அறிவு பேரனுக்கும் பெரிதும் பயன்படுவதில்லை. அவரவர் பட்டு அனுபவித்தே அறிவு பெறுகின்றனர்.

கல்வி அறிவையும், கேள்வி அறிவையும் அனுபவ அறிவாக ஏற்றுக்கொள்கிறவனே விரைவில் அறிஞன் ஆகிறான்.


அறிவும் செயலும்

பெரியோர் சொல்லும் நீதிகள்னைத்தும் நான் அறிந்தவை களாகவே இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பின்பற்றி நடப்பதோ என்னால் இயலாதததாகவே இருக்கிறது.

அறிவில்லை - பலருக்கு அறிவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. இதனால் எனக்கு அறிவில்லை என்பது பிறருக்குத்தான் தெரியும் போலும்!


பொன்மொழி

ஏமாறுபவர் இல்லாவிடில், ஏமாற்றுபவர் இல்லை

கோள் கேட்பவர் இல்லாவிடில், கோள் சொல்லுபவர் இல்லை.

ஊன் தின்பவர் இல்லாவிடில், உயிர் கொல்வோர் இல்லை.

அறிவற்றோர் இல்லாவிடில், அறிவுடையோர் இல்லை.


உலகம்

தன்னலம் ஒன்றையே கருதிப் பிடிவாதத்தோடும் கருமித்தனத்தோடு வாழ்பவனைக்கூட இவ்வுலகம் கெட்டிக் காரன், திறமைசாலி என்று கூறிவருகிறது.

இரக்கக் குணம் படைத்து, விட்டுக் கொடுத்து, பிறருக்கு உதவிசெய்து வாழ்டவனைக்கூட இவ்வுலகம் ‘ஏமாளி!’ என்று கூறி நகைக்கிறது.