பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#.

  • بیہ-p

g: அதிவுக்கு வி குந்து -- இதனுல் மக்களினத்தின் அறியாமையைப் போக்கி அறிவு கொளுத்துதல் கவிதையின் முதன்மையான ருத்தல்வேண்டும் என்பது பெறப்படுகின்றது. மேலே நாட்டினர் படிக்கும்போது இன்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பாடல்களை ஒரு பகுதியாகவும், ஒழுக்கம் கற்பிக்கும் பாடல்களை மற்ருெரு பகுதியாகவும் கொண் டுள்ளனர். பின்னேயதை அ ற ங் கூறு ம் கவிதை (tidaetic poetry) என்று அவர்கள் கூறுவர். அத்தகைய தனியான பாகுபாடு தமிழ்ப் பாடல்களில் கானுவது அரிதாகும். எனினும், இடைக் காலத்தில் தோன்றிய பழமொழி, ஆசாரக்கோவை, திரிகடுகம், நான்மணிக் கடிகை ஆகிய நூல்களே நோக்கும்போது இத்தகைய ஒரு பிரிவு தமிழ்க் கவிதைகளுக்கும் தேவை என்று கருதவேண்டியுள்ளது, உரைநடை அதிகம் பயிலாத காலத்தில் பாட்டைக் கருவியாகக் கொண்டு அறவுரை வழங்கி வந்தனர். இவை பாவடிவில் இருப்பினும் சிறந்த கவிதைகள் ஆகா. இவற்றை வெறும் நீதிகளையும் கொள்கைகளையும் கொண்டுள்ள பெட்டகங்கள் என்று கூறலாமேயன்றி உள்ளத்தைத் தொடும் சிறந்த கவிதைகள் என்று கூற முடியாது. தமிழ்க் கவிதைகளில் பெரும்பான்மையானவை பயிலும்போது இன்பந்தருவதுடன் உள்ளத்தைத் திருத்தும் பண்பைப் பெற்றிருப்பதால், படிப்போரின் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவனவாக இருக் கின்றன. பேரிலக்கியங்களிலிருந்து சிற்றிலக்கியங்கள் வரை இப் பண்பு ஊடுருவியிருப்பதை எளிதில் அறிய லாம் அறங் கூறுவதையே நோக்கமாகக் கொண்ட திருக்குறளை வெறும் நீதிநூல் என்று மட்டும் கூறுவது பொருத்தமன்று.