பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் நீதியும் 93 நாளென ஒன்றுபோல் காட்டி உயிருேம் வளது உணவார்ப் பெறின்" நன்ருங்கால் நல்லவாக் காண்பவர் அன்ருங்கால் அல்லற் படுவ தெவன்" அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை." இந்த மூன்று குறள் மணிகளிலும் கூறப்பெறும் உண்மைப் பொருள்கள் எவ்வளவு ஆழமானவை? இவற்றில் கவிதைக்குரிய இயல்பு ஒரு சிறிதும் கெடா திருப்பதை அறிக. இங்ங்னமே, நூலிலுள்ள குறட் பாக்கள் அனைத்தும் நீதியை உணர்த்துவதுடன் கவிதைக்குரிய எல்லா இயல்புகளுடனும் சிறந்து பொலிகின்றன. கற்பனை, அனுபவம், உணர்ச்சி ஆகியவற்றில் அவை தோய்ந்து நிற்பதால் அவை உயர்ந்த கவிதை நிலையைப் பெற்றுத் திகழ்கின்றன. அவை படிப்போரது வாழ்க்கையைச் செம்மைப் படுத்தும் ஆற்றலையும் பெற்று விளங்குகின்றன. கவிதையின் தலைமைப் பண்பு அஃது உணர்த்தும் உண்மையில்தான் இருக்கின்றது. மனித அனுப வத்திலும் இயற்கையிலும் நாம் சாதாரணமாகக் காணுத் புலனுணர் ஆற்றலுடைய அழகுகளையும் ஆழ்ந்த உண்மைகளையும் அது காட்டுகின்றது. நம்மில் ஒரு சிலருக்குக் கவிதை யு ன் ைம யு ம் உட்காட்சியும் (insight) ஓரளவு அமைந்திருக்கின்றன. ஆணுல், இவர்களுள் பெரும்பாலோரிடம் இத்தகைய கவிதைத் திறன் அன்ருட வாழ்க்கையின் இருப்பு நிலைகளால் நெருக்குண்டு, அவ் வாழ்க்கையின் கூறுகளாகவுள்ள உலோகாயதக் கவர்ச்சிகளால் குன்றச் செய்யப்பெற்று, சில சமயம் நனவு நிலையிலும் அல்லது நனவிலி நிலை 2. குறள்-334, 3 குறள்-379. 4 குறள்-559