பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக்கு விருந்து யிலும் தாக்கப்பெறுகின்றது. ஆல்ை, ೬೯ಾಹ கவிஞனிடம் உலகப் பொருள்களின் அழகினையும், ஆழ்ந்த உண்மையினையும் கானுந்திறன் ஈடு எடுப் பற்ற அளவிலுள்ளது. அன்றியும், தான் காண்ட வற்றையும் கேட்பவற்றையும் தெளிவாக வெளியிட்டு விளக்கம் கூறும் திறனும் அமைந்து கிடக்கின்றது. இவ் விளக்கத்தைப் படிக்கும் நம்முடைய கற்பனையும் ஒத்துணர்ச்சியும் துடிப்புப் பெற்று அவற்றை அக்கவிஞ னுடன் சேர்ந்து காணவும் உணரவும் செய்து விடு கின்றது. இவ்விடத்தில் கோலரிட்ஜ் என்ற ஓர் ஆங்கிலப் பெரியார் கவிஞனைப்பற்றிக் கூறுவதைத் திரும்பக் கூறுவது மிகவும் பொருத்தமாகும். அவர் கூறுவதாவது: 'உலக வாழ்வில் பழக்க வழக்கங்களின் காரணமாகவும், உலோகாயதத்தின் காரணமாகவும் உறங்கிக் கிடக்கும் நம் கவனத்தைக் கவிஞன் எழுப்பி அதனை உலகப் பொருள்களில் உறைந்து கிடக்கும் அழகினைக் காணச் செய்கின் ருன்; நாம் அப்பொருள்களுடன் நெருங்கிப் பழகுவதாலும், மண்ணுசை, பொன்னுசை.பெண்ணுசை' காரணத்தாலும் என்றுமே வற்ருத அவ் வழகுக் கரு ஆலத்தைக் கண்ணிருந்தும் பார்க்க முடிகின்றதில்லை; காதிருந்தும் கேட்க முடிகின்ற தில்லை; உள்ளம் இருந்தும் உணரவும் புரிந்து கொள்ளவும் முடிகின்ற தில்லை.". எனவே, கவிதை நமக்குக் கவிஞனின் உள் நோக்குடன் நாமாகவே வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கிப் பொருளுணரக் கற்பிக்கின்றது; தம்முடைய பார்வையையும் ஒத்துணர்ச்சியையும் உரம்பெறச் செய்கின்றது. இவ்வாருக அது நம்மிடம் மறைந்து கிடக்கும் கவிதைப் பண்பினையும் வளர்க்கின்றது. சிறந்த கவிதைகள் யாவும் உண்மைகளைக் கற்பனை, அனுபவம் என்ற இரண்டுடன் கலந்து அழகு வடிவான