பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {}: அறிவுக்கு விருந்து என்று 'ஊழிற் பெருவவி யாவுள' என்ற வள்ளுவன் கருத்தை நயமாக எடுத்துக் காட்டுகின்ருன், கம்பன் காட் டும் இந்நீதி இடத்திற்கேற்றவாறும் கவிதைப் பண்பு களுடனும் வெளிப்படும்போது அறங்கூறும் நோக் கத்தை தாம் உணர்வதே இல்லை; நம்மையறியாது விதியின் வலிமை நம் உள்ளத்தில் பதிகின்றது. வாழ்க்கையின் உயர்ந்த அடிப்படை யுணர்ச்சிகளாக வுள்ள அன்பு, வீரம், காதல் தியாகம் போன்ற பண்புகள் அமைந்து அவற்றின் வாயிலாக உயிர்கள் எல்லாவற்றினுடனும் இயைந்து உணரும் விழுமிய அனுபவம் பெறத்தக்கதாக விளங்கினுல்தான் கவிதை சிறந்த நிலைத்த இன்பம் தருவதாகின்றது. இந்த விழுமிய உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த கவிதைதான் பெருங்கவிதை (great poetry) என்ற நிலையையும் அடைகின்றது. கவிஞன் இவற்றை யெல்லாக் மனத்தில் கொண்டு கவிதையைப் படைக்க முடியாது; அப்படி முயன்றலும் அக்கவிதை தான் விரும் பியபடி அமையாது. ஆணுல், தான் பெற்ற விழுமிய உணர்ச்சியைப் - அனுபவத்தைப் - பிறரும் பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டிலும் கவிஞனிடம் இருந்தால் கவிதை தாணுகக் கவிஞனின் விருப்பம்போல் நன்கு அமைந்து விடும். - இயற்கைப் பொருள்கள் இன்பமயமான சமாதியில் அடங்கிக் கிடக்கின்றன. அந்த அமைதி நிலையைக் கலைக்காமல் அதனுடன் கலந்து கொள்ளும் இயல் புடையவனே கவிஞன். அவன் இயற்கையோடு பழகும்தோய்ந்து நிற்கும்-அனுபவம் வாய்ந்தவன். இயற்கை யுடன் அவன் ஒன்றி நிற்கும் நிலையே தனி. உறங்கும் குழந்தையைத் தாய் அணைவதைக் கண்டுள்ளோம் அன்ருே? தாய் குழந்தையை மார்போடு சேர்த்தே