பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#04 அறிவுக்கு விருத்து சொற்களால் கூறி வற்புறுத்தாமல் கற்பனை யனுப வத்தின் வாயிலாக அப்பாடல்கள் உள்ளத்தில் தாமே சென்று பதியும் முறையில் அமைந்து விடுகின்றன. மேற் கூறியவற்றை நோக்குங்கால் கவிதை வாழ் வுடன் இணைந்த உறவுகளைப்பற்றியே பேசுகின்றது என்றும், அது நம் எல்லா மன நிலைகட்கும் முறையீடு செய்கின்றது என்றும் அறிகின்ருேம். எந்தப்பொருளாக இருந்தாலும், அப்பொருளைக்கொண்டு தக்க முறையில் கவிதை வடிக்கப்பெற்ருல் அது கவிதையழகினையும் உயர்ந்த குறிக்கோளையும் தரும் என்பதற்கு ஐயமில்லை. அது கூறும் முறையிலும் புதிய பொருளையே புலப் படுத்தி நிற்கும். உண்ட வெறியில் முன்னெருநாள் உண்ட கலத்தை உடைத்தெறிந்தேன் துண்டு துண்டாய்ப் போனகலம் துணிந்து மெல்ல எனநோக்கிப் "பண்டு யானும் உன்வாழ்வைப் பாரில் அடைந்தேன் நீயுமெனக்(கு) அண்டும் இந்த வாழ்வைஇனி அடைவாய் உண்மை என்றதடா." என்ற பாடலின் உண்மையை நோக்கின் இது பெறப் படும். இதிலிருந்து கவிஞர்கள் யாவரும் பெருமைக் குரிய நிபந்தனைகளை நிறைவேற்று வதற்காக அறம் உரைக்கும் நோக்கத்துடன் கவிதை புனைய வேண்டும் என்பது நம் கருத்தன்று, சதா வாழ்விற்குரிய கருத்துக் களையே உணர்த்த வேண்டுமென்பதும் நம் கோட்பா டன்று. பிரசாரகனது வேலைக்கும் கவிஞனது வேலைக்கும் வேறுபாடு உண்டு; நாம் இரண்டயும் வைத்துக் குழப்ப 29. கவிமணி-உமர்க்கய்யாம் பாடல்கள். பா. 37