பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் சமயமும் 143. நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அவர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டு இன்றளவும் நினைவில் இருக்குமாறு அவர்கள் இயற்றியுள்ள இலக்கியங்கள் விளங்குகின்றன. பெளத்த சமயத்திற்கு அடுத்தபடியாகத் தமிழ் நாட்டில் செல்வாக்குப்பெற்றது. சமண சமயமாகும், நாளடைவில் இஃது அரசாங்க சமயம்’ என்ற நிலையையும் அடைந்தது. பாண்டிய மன்னர்களும் பல்லவ அரசர்களும், சோழ வேந்தர்களும் இச் சமயத்தைத் தழுவினர். சமணர்கள் தமிழ் மொழியில் பல நூல்களைச் செய்திருக்கின்றனர். அவர்கள் செய்த நூல்களைத் தேவார காலத்திற்கு முன்னர்ச் செய்தவை. தேவார காலத்திற்குப் பின்னர்ச் செய்தவை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். தேவார காலத்திற்கு முன்பு நாலடியார், அறநெறிச்சாரம் போன்ற அறம் உரைக்கும் நூல்களை மட்டிலுந்தான் செய்தனர்; வரலாறு கூறும் தமிழ் இலக்கியங்களை அதிகமாகச் செய்யவில்லை. செய்த ஒரு சிலவற்றுள்ளும் சிலப் பதிகாரத்தைத் தவிர மற்றவை மக்கள் மனத்தைக் கவர்வனவாக இல்லை. சிலப்பதிகாரம் மட்டிலும் தமிழ் மக்களிடம் ஓர் உன்னத இடத்தைப் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான ஒரு சிறந்த தமிழ்க் கதையைப் பொருளாகக் கொண்ட முதல் காப்பிய நூல் இதுவே. படிப்பதற்கு விறைப்பாக உள்ள அகவல் நடையைக் கொண்டிருந்தாலும், அந்நடையிலேயே அற்புதமான கொடுமுடிகளையும் உயர்ந்த பண்பு கலந்த கவிதைகளையும் கொண்டுள்ளது; இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கு இலக்கியமாகவும் விளங்குகின்றது. தேவார காலத்திற்குப் பிறகு சமணர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டால்தான் அழியாப் புகழ்