பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அறிவுக்கு விருந்து வர்மப் பல்லவன் சமண சமயத்தைவிட்டுச் சைவ சமயத்திற்கு வந்ததும்,சிந்தாமணி என்ற நூலில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு சமண சமயத்தைத் தழுவியிருந்த இரண்டாம் குலோத்துங்க சோழனைச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் பாடிச் சைவ சமயத்தைத் தழுவும்படி செய்ததும் வரலாற்றுப் புகழ்பெற்ற நிகழ்ச்சி களாகும். அப்பர், சு ந் த ர ர், திருஞானசம்பந்தர், மசனிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேனினும் இனியவையும் கவிச்சுவை நிறைந்தனவும், அருள் உணர்ச்சியின் சுடர்போன்றனவும் ஆன தோத்திரப் பாக்களைப் பாடிக் குவித்திருக்கின்றனர். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய மூ ன் று சமய குரவர்களும் பாடிய தேவாரப் பாக்கள் ஏழு திருமுறைகளாகவும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம் திருமுறையாகவும் இன்று தமிழர்களின் கையில் திகழ்கின்ற்ன. .ே ச. க் கி ழார் அருளியுள்ள பெரிய புராணம் பக்திரசம் சொட்டும் சிறந்த தமிழ்க் காப்பிய இலக்கியமாக விளங்குகின்றது, சைவர்களுக்கு அஃது ஒரு பாராயணம் செய்யும் நூலாகவும் இருக்கின்றது. இதைத் தவிர, இன்று பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணம், கச்சியப்பருடைய கந்தபுராணம் ஆகியவை சிறந்த சைவ இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. சைவம் ஓங்கிய காலத்தில் வைணவமும் ஓங்கியது. வைணவ சமயத்தைப் பரப்பிய பன்னிரு ஆழ்வார்களும் தங்களுடைய பக்திப் பெருக்கையும், சமயக் கொள்தை களையும், தத்துவங்களையும் கவிதை மணத்துடன் நெஞ்சை உருக்கும் செஞ்சொற் பாசுரங்களில் பாய்ச்சி இருக்கின்றனர். ஆழ்வார்கள் பாடும் பாசுரங்கள் யாவும் இன்று நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்ற நூல் வடிவில் தமிழர் கையில் இருக்கின்றன. இவை இயற்றப்