பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் சமயமும் 115 பட்டிராமல் இருந்தால், தமிழ் இலக்கியக் கருவூலம் அளவில் எவ்வளவு குறைவுபட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. சமணர்களுக்குக் காவியமாகச் சிந்தாமணியும் சைவர்களுக்குக் காவியமாகத் பெரிய புராணமும் விளங்குவதுபோல, வைணவர்களுக்குக் கம்பராமாயணம் சிறந்த காவியமாக விளங்குகின்றது. உலக மகா காவியங்களில் தலை சிறந்தது என்ற பெரும் புகழையும் பெற்று விளங்குகின்றது; இதில் தமிழ்க் கவிதா மண்டலத்தின் உன்னதமான கொடுமுடியும், கற்பனை உலகத்தின் வி ரி வு ம், பொலிவும், தமிழர்களின் கலைவளமும் பிறவும், தமிழ்ச் சொற்களின் ஆற்றலும், தமிழ் நடையின் சிறப்பும் ஒருங்கே விளங்குகின்றன. படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் என்பது இராமானுச நூற்றந்தாதியின் அடி. இது பக்தியாற் பிறந்த நூல் என்பதைக் காட்டுகின்றது. புதிய ஊக்கத்துடன் தமிழ் நாட்டில் ஏற்பட்ட சமய உணர்ச்சி பலப்பட்டு வந்ததன் காரணமாக அரசர்களும் அதில் ஈடுபட்டுச் சமய வளர்ச்சிக்கு ஆதரவு அளித்தனர். சமயப் பற்ருல் கல்வியில் ஈடுபட்டு அதைச் சமயப் பிரசாரத்திற்கும் முக்கிய கருவியாகக் கருதினர். அதன் காரணமாக இலக்கியங்கள் வளர்ச்சியடைந்தன. கற்ற அறிஞர்கள் சமயங்களில் ஈடுபட்டதால் முறையான தத்துவ நூல்கள் பிறந்தன. சங்கரர், இராமானுசர் போன்ற அறிஞர்கள் ஒரு சில முதனூல்களுக்குப் பேருரைகளைச் (பாஷ்யங்கள்) செய்தனர். சைவர்களும் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற சம்ய