பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iH அறிவுக்கு விருந்து நூல்களை இயற்றித் தமது சமயத்தை ஒரு தனித் தத்துவ முறையில் அமைந்தனர். இதன் பிறகு பல உரையாசிரியர்கள் தோன்றித் தமிழ் இலக்கியங்களின் வளத்தைத் தமிழர்களுக்கு விளக்கினர். பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்கு இவர்கள் செய்த உரைகளேயன்றி சமய நூல்களுக்கும் உரைகளைச் செய்து ள் ள ன ர். இத்துறையில் நச்சிளுர்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்கள் சிறந்த வர்கள். சைவ சமயத்தைச்சார்ந்த நச்சிஞர்க்கினியர், சமண இலக்கியமாகிய சிந்தாமணிக்கும் 忍.5D卵 செய்திருக்கின் ருச்! சமய நூல்களுக்கு உரை செய்தவர் களில் திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை செய்த பெரிய வாச்சான் பிள்ளை த லை சி ற ந் த வர். சிவஞான போதத்திற்குச் சிவஞான முனிவர் சிவஞான மாபாடியம் என்ற பேருரை ஒன்று க ண் டி ரு க் கி ன் ரு ர். உரையாசிரியர்களின் துண்மானுழை புலம் நுட்பமான சமயக் கருத்துக்களை விளக்கி நிற்கின்றது. சோழப் பேரரசுகள் வலி குன்றித் தேய நேர்ந்த காலத்தில் சமய முறைகளை ஆட்சி செய்யவும் தத்துவ அறிவை வளர்க்கவும் மடங்கள் நிறுவப்பெற்றன. சைவத்திற்கும் வைணவத்திற்கும் மடங்கள் ஏற்பட்டன. மடங்களின் ஆட்சி முதிர்ந்த பற்றற்ற துறவிகள் வசம் ஒப்புவிக்கப்பெற்றது, திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், காஞ்சீபுரம் ஞானப்பிரகாசர் ஆதினம், சூரிய நயினர்கோயில் ஆதீனம் போன்றவைகளும் வீர சைவ மடங்களும் சமயத் தொண்டுடன் தமிழ்த் தொண்டையும் செய்து வந்தன. இக்காலத்தில் தல புராணங்கள் ஏராளமாகத் தோன்றின. இவ்வாறு தல புராணங்களை மிகுதியாக இயற்றியவர் சென்ற