பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் சமயமும் - 117 நூற்ருண்டில் இருந்த திரிசிரபுரம் மகா வித்துவான் மீளுட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் ஆ வ ர். அவர்கள் மட்டிலும் பன்னிரண்டு தல புராணங்களை இயற்றி இருக்கின்றனர். இத்தல புராணங்களுள் காஞ்சிப் புராணம், திருத்தணிகைப் புராணம் என்பவை இலக்கிய நயமுடையவை. இப்புராணங்கள் யாவும் பெருங்காப்பிய நடையில் எழுதப்பட்டுள்ளன. இவை யாவும் கவிதைப் பண்புகள் இல்லாத வெறும் செய்யுட் குவியல்களாகக் (heap of verses) sTLÁuagfl $$ sár nsT. சமய நூல்கள் புராணங்களாக ஆக்கப்பட்டு வருவதைக் கண்ட இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் தத்தம் சமய நூல்களையும் தமிழில் புராண வடிவில் ஆக்க எண்ணினர். இவற்றைப் படித்தால் மக்கள் தம் சமயங்களை நாடுவர் எ ன் று ம் கருதினர்; சமயம் மாறிய மக்கள் படிக்கவும், புராண வடிவில் தம் சமயக் கருத்துக்களை உணர்த்தவும் தக்க நூல்கள் தேவையாக இருந்தன. முதன் முதலாக இத்தாலிய நாட்டுப் பாதிரியான வீ ர ம மு னி வர் என்பார் தமிழில் 'தேம்பாவணி'என்ற ஓர் உயர்ந்த காவியத்தைப்பாடினர். இஃது ஏசுநாதரின் வளர்ப்புத்தந்தையாகிய சூசையப்பர் வரலாற்றைக் கூறுவது; முப்பத்தாறு படலங்களையும் 3615 திருவிருத்தங்களையும் கொண்டது. நமது நாட்டுக் கிறித்தவப் .ெ ப. ரி யார் அரிகிருஷ்ணபிள்ளை என்பார் 'இரட்சண்ய யாத்ரீகம் என்ற க வி. ய த் ைத ச் செய்திருக்கின்ருர்.இஃது ஆங்கிலப் புலவர் ஜான் பணியன் இயற்றிய யாத்ரீகனின் முன்னேற்றம் (Pilgrim's Progress) என்ற கற்பனை நூலைத் தழுவி எழுதப்பட்ட தாகும்; ஐந்து பருவங்களையும் 8800 செய்யுட்களையும் கொண்டது இந்நூல். இவரால் இ ய ற் ற ப் ட் ட 'இரட்சண்ய மளுேகரம் என்ற நூலிலுள்ள பாட்டுக்கள்