பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 48 அறிவுக்கு விருந்து தேன்போல் இனிமை சொட்டும் தேவாரப் பாடல்கள் போலிருக்கின்றன. சொல்லா விட்டால் அவற்றை எவரும் தேவாரப் பாடல்கள்தாம் என்றே கருதுவர். கடிகைமுத்துப் புலவரின் சீடரும் எட்டையபுர மன்னரின் அவைக்களப் புலவருமான உமறுப் புலவர் என்ற இஸ்லாமியர் சுமார்ஆருயிரம்பாட்டுக்கள் அடங்கிய சிருப் புராணத்தை இயற்றியிருக்கின் ருர்; இது கவிதைச் சுவையும் இலக்கிய இன்பமும் செறிந்த ஒர் உயர்ந்த தமிழ்க் காவியம் ஆகும். குமணங்குடி மஸ்தான் சாயபுப் பாடல்களும் சதகங்களும் கிட்டத்தட்ட தமிழ் நாட்டுச் சித்தர்கள் பாடிய பாடல்களின் முறையில் அமைந்திருக் கின்றன என்று சொல்லலாம். சில நூ ற் ரு ண் டு க ளி ல் மடங்களின் ஏற்றம் குறைந்த்து. உண்மையான சமய உணர்ச்சியும், ஒழுக்க நெறியுமற்ற துறவிகள் மடாதிபதிகளின் இடத்தைப் பெற்ற போது சமயங்களின் உண்மையொளி. மங்கிற்று. ஆளுல், இக்காலத்தில் ைவ ன வ த் தி ல் வேதாந்த தேசிகரும், சைவத்தில் சிவஞான முனிவரும் பல நல்ல நூல்களை இயற்றியுள்ளனர். தாயுமான அடிகள், இராமலிங்க அடிகள், குமரகுருபர அடிகள், பட்டினத்து அடிகள் போன்ற பெரியார்கள் ஏராளமான கவிதை களைப் பொழிந்திருக்கின்றன; இசைச் சுவை நிறைந்த அவை பக்திச் சுடருடன் திகழ்கின்றன. இவை யாவும் சமய சம்பந்தமான பாடல்களே. இஸ்லாமியர் படையெடுப்பாலும் பிற அரசியற் குழப்பங்களாலும் அமைதியற்றிருந்த நாடு விசய நகர அரசர்களது ஆட்சியிலும் அவர்களின் பிரதிநிதிகளின் கீழும் ஒருவாறு அமைதியுடன் இருந்தது. இக்காலத்தில்