பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2: அறிவுக்கு விருந்து வைதிகம், ஆசீவகம் ஆகிய நான்கு சமயங்களில் முதன் முதலாக வெற்றியடைந்து செல்வாக்குப் பெற்றது பெளத்த சமயமே. பெளத்த சமயப் புலவர்கள் இயற்றிய ஒரு சில செய்யுட்கள் கடைச் சங்க காலத் தொகைநூல் களுள் காணப்பெறுவதால் பெளத்த சமயம் கடைச்சங்க காலத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று ஊகிக்க இடமிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, மணிமேகலை’ என்ற காவியத்தை இயற்றிய மதுரை கூலவாணிகன் சாத்தனர் இயற்றிய பாடல்கள் அகநாநூறு, பு ற நா நூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் எட்டுத் தொகை நூல்களில் காணப்படுகின்றன. இளம்போதியார் என்ற பெளத்தப் புலவர் இயற்றியுள்ள செய்யுள் ஒன்று நற்றிணையில் 72-ஆம் பாட்டாகத் தொகுக்கப் பெற்றிருக்கின்றது; அன்றியும், அசோகர் வெட்டுவித்த கல் வெட்டுக்கள் வாயிலாகவும் பெளத்த சமயம் கடைச் சங்க காலத்துக்கு முன்பே தமிழ்நாடு போந்தமை அரண் செய்யப்பெறு கின்றது. இக் கல்வெட்டுக்கள் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் நமது நாட்டிலும், தமிழ் நாட்டிலும், பிறநாடு களிலும் மருத்துவ நிலையங்களை அமைத்த செய்தியையும் பெளத்த நெறியைப் பரப்பியதையும் தெரிவிக்கின்றன. எனவே, கி. மு. மூன்ரும் நூற்ருண்டிலேயே பெளத்த சமயம் தமி ழ் நாட் டி ல் ய ர ப் ப ப் பெற்றமையை அறிகின் ருேம், 'சங்கத்தின் மூலம் தொண்டு: பெளத்தர்களால் போற்றப்பெறும் மும்மணிகளில் ஒன்ருகிய சங்கத்தின் மூலமாகத்தான் பெளத்தபிட்சுக்கள் பெளத்த சமயத்தை 1 Rock Edict (ii}; Rock Edict (iii)