பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i:8 --....-ی۔ تہہ------------ .--------------------- அறிவுக்கு விருந்து, இந்நூல் இன்று வழக்கிலில்லை. கச்சியப்ப முனிவர் கந்த புராணத்தை இயற்றி அரங்கேற்றியபொழுது அப் புராணத்தில் வருகின்ற திகட சக்கரம்' என்னும் செ ற் பு ண ர் ச் சி க்கு இலக்கணம் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தினர் என்றும், அதற்கு இந்நூலிலிருந்து இலக்கணம் காட்டப்பெற்ற தென்றும், பின்னர் அ ைவ யி லி ரு ந் தோர் அப்புணர்ச்சியை ஒப்புக்கொண்டனர் என்றும் ஒரு வரலாறு கூ ற ப் பெறு கி ன் றது. இதிலிருந்து அக்காலத்திலேயே இந்நூல்வழக்கொழிந்து விட்டமை பெறப்படுகின்றது. - இந்நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் வரலாறு, பெளத்த சமயக் கொள்கைகள் முதலியவற்றை அறியச் சிறிதளவு துணை புரிகின்றன. சோழர்கள் கூடல்சங்கமம் போன்ற இடங்களில் அயல் நாட்டு வேந்தரை வென்ற செய்திகளை உரையில் காட்டப் பெறும் மேற்கோட் செய்யுட்களால் அறியலாம். இவை கல்வெட்டுக்களால் உறுதி செய்யப்பெறுகின்றன. யாப்புப் படல உரையில் மேற்கோள்களாக வரும் புத்தரைப்பற்றிய அழகான பாடல்களினின்றும் பல பெளத்த சமயக்கொள்கைகளையும், புத்தர் பெருமானின் வரலாற்றுக் குறிப்புக்களையும் அறிந்துகொள்ளலாம். அவற்றையன்றி பெளத்தசமயம்பற்றிய செய்திகளை அறிவதற்கு வேறு கருவி நூல்கள் தமிழில் இல்லை. டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் மணிமேகலைக் குறிப்புரை எழுதுவதற்கு அவை சிறந்த கருவியாக இருந்தன என்று கூறியுள்ளனர். குண்டலகேசி விருத்தம், கலிவிருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம், உதயணன் காதை, நியாய சூடாமணி, புதியா நுட்பம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம், வச்சத்தொள்ளாயிரம்