பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தர்கள் வளர்த்த பைந்தமிழ் 129 முதலிய நூல்களின் பெயர்கள் இந்நூலின் உரையில் கூறப்பெற்றுள்ளன. இலங்கையில் சிங்களவர் தமிழ் பயின்றபொழுது பெளத்தரால் இயற்றப்யெற்ற இந்த இலக்கண நூலைக் கற்றிருக்கவேண்டும் எ ன் று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இறந்துபட்ட ஒரு சில நூல்கள்: குண்டலகேசி, சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், பிம்பசாரக் கதை ஆகிய நூல்கள் யாவும் இறந்து பட்டவை. இவற்றைப் பற்றிய ஒரு சில கு றி ப் புக் க ளே மட்டிலும் ஈண்டு தருவோம். குண்டலகேசி, குண்டலகேசி என்பது ஒரு தருக்கதுல்; பெளத்தசமயச் சார்பானது. ஒரு வணிகக் கன்னிகை புத்தர் பெருமானின் உபதேசம் பெற்று அருக சமயத்தை வென்று புத்த சமயத்தை யாண்டும் பரப்பிய கதையைக் கூறுவது. இது பெரும்பாலுத் விருத்தப் பாவிகுல் யாக்கப்பெற்றதாதலின் இதனைக் குண்டலகேசி விருத்தம்" என்றும் வழங்குவர். இந்நூலாசிரியர் காதகுத்தனர் என்பவர். இந்நூல் இ ய ற் ற ப் .ெ ப. ற் ற காலம் தெரியவில்லை. குண்டலகேசிக்கு விடையிறுத்துச் சமணக் கொள்கையை நிலைநாட்ட இயற்றப்பெற்றது லேகேசி என்னும் நூல். சமயப் பொருமையின் விளைவால் நீலகேசி நின்று நிலவ, குண்டலகேசி அழிந்துபட்டது. இவ்வாறு சமயக் காழ்ப்பு தமிழ்நாட்டிற்குப் பெருந் தீங்கை விளைவித்திருக்கின்றது. அழிந்துபட்ட குண்டலகேசிச் செய்யுட்கள் “புறத்திரட்டு” என்னும் நூலில் காணப்படுகின்றன. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, அ. வி. 9,