பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தர்கள் வளர்த்த பைந்தமிழ் 131 அருள்மொழியா னல்வாய்மை யறித்தவரே பிறப்பறுப்பார் மருள்நெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ அன்றியும், நீலகேசி புத்தவாதச் ச ரு க்கம் 64-ஆம் பாட்டுரையில் மருள்தரு மனம்வாய் மெய்யிற் கொலே முதல் வினைபத்தாமே என்பது சித்தாந்தத் தொகை' என்றும் கூறப்பெற்றுள்ளது. இவற்றைத் தவிர இந்நூல்பற்றிய தகவல்கள் வேருென்றும் கிடைக்க வில்லை. திருப்பதிகம்: இது வு ம் இறந்துபட்ட நூலே. நூலின் பெயரைக் கொண்டு இது புத்தர் பெருமான்மீது பாடப்பெற்ற ஒரு தோத்திர நூல் என்று ஊகிக்க இடமுண்டாகின்றது. இந்நூல் இயற்றிய ஆசிரியர், இயற்றப்பெற்ற காலம் முலலியவற்றை அறியக்கூட வில்லை. சிவஞான சித்திரியார் உரையில், எண்ணிகந்த காலங்கள் எம்பொருட்டான் மிகவுழன்று எண்ணிகந்த காலங்கள் இருள்திர வொருங்குனர்ந்தும் எண்ணிகந்த தானமும் சீலமும் இவையாக்கி எண்ணிகந்த குணத்தினுன் எம்பெருமான் அல்லளுே. என்ற செய்யுளை மேற்கோள் காட்டி இது திருப்பதிகம் எனக் கொள்க’ என்று குறிப்பிட்டுள்ளார் ஞானப் பிரகாசர். - விம்பசாரக் கதை: இந்தப் பெயர்கொண்ட பெளத்த நூல் ஒன்றிருந்ததாக நீலகேசி 190-ஆவது பாட்டுரை யில்ை அறியலாகும். நீலகேசி உரையாசிரியர்,