பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕙器盏 அறிவுக்கு விருந்து மட்டிலும் இந்த எழுத்துவழக்கத்தில் இருந்தது. ஆனல், பாண்டிய நாட்டில் பழைய வட்டெழுத்தையே மக்கள் வழங்கி வந்தனர். கி. பி. பத்தாம் நூற்ருண்டில் சோழமன்னர்கள் கி ர ந் த எழுத்தைப் பாண்டிய நாட்டிலும் புகுத்தினர் என்பதைக் குற்ருலத்திலுள்ள கல்வெட்டுக்களால் அறியலாம். ஆனல், இன்றைய ஆராய்ச்சியாளர்கள் வ ட் .ெ ட ழு த் து பி ர மி எழுத்திலிருந்து தோன்றியதல்ல என்று கூறுகின்றனர். இவ்வாறு சமயத்தொண்டாற்றிய பெளத்தர்கள் தமிழையும் வளர்த்தனர். சமயத்தொண்டு, மொழித் தொண்டையும் இணைத்துச் செல்கின்றது. தமிழ் மொழியைப் பொறுத்தவரை சமயமும் மொழியும் பிரிக்க முடியாதவை.