பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக்கு விருந்து உலகோர்க்குணர்த்தி அழியாத புகழ் பெற்றனர். மற்றும் சிலர் மேனுட்டு முறையில் அகராதி .ெ த கு த் து ந ம் .ெ மா ழி கற்பவருக்குப் புதியதோர் வாயில் அமைத்தனர். இதல்ை மேட்ைடார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவை காண்பதற்கு எளிதாயிற்று. கற்கும்போது அகராதியின் அரிய துணையை அறிந்த நமக்கு இவவுண்மை எளிதிற் புலகுைம். இவ்வாறு தமிழ் மொழிக்கு ஏற்றத்தை அளிப்பதற்கு உழைத்த கிறித்தவப் பெரியார்களின் தமிழ் தொண்டை ஓரளவு ஆராய்வோம். அச்சுப்பொறிகள்: நமது நாட்டில் ஐரோப்பியர் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் அச்சுப் பொறிகள்வந் தன. முதன் முதலாகக் கிறித்தவ சமயத்தை நம்நாட்டில் பரவச்செய்த ஏசுவின் சபைப் பாதிரிமார்கள்தாம் அச்சுப் புத்தகங்களை உண்டாக்கினர். இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் அச்சுப் புத்தகங்கள் உண்டாயின என்பதை நாம் அறியும்போது உண்மை யிலேயே பெருமிதங்கொள்ளுகின்ருேம். பதிருைவது நூற்ருண்டின் பிற்பகுதியில் நமது நாட்டில் பல இடங் களில் அச்சுப்பொறிகள் அமைக்கப்பட்டன. மலையாள நாட்டில் கொச்சியிலும், திருநெல்வேலியில் புன்னைக் காவல் என்ற இடத்திலும் பிறகு வைப்புக்கோட்டை, அம்பலக்காடு முதலிய இடங்களிலும் அச்சுப் பொறிகளை அமைத்தனர். அச்சுப் பொறியும் காகிதமும் ஏற்பட்ட பிறகுதான் கல்வி நாடெங்கும் விரைவில் பரவலாயிற்று. தோட்டி முதல் தொண்டைமான் வரை, பாமரர் முதல் பாவலர்வரை குறைந்த செலவில் நூற்களை வாங்கிப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. படித்தவர்களிடையே சமய உண்மைகள் பரவில்ைதான் நல்ல பலன் காணலாம்