பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#40 அறிவுக்கு விருந்து இன்னுெரு நூல் திருக்காவலூர்க் கலம்பகம் ஆகும். கொள்ளிட நதியின் வடகரையிலுள்ள ஏலாக் குறிச்சி என்ற சிற்றுரே திருக் காவலூர், அவ்வூரில் கட்டிய கோவிலில் எழுந்தருளியிருக்கும் தே வ ம ப த ர மரியம்மையின் மீது பாடப்பட்டதுதான் இப்பிரபந்தம். அடியார்களைக் காத்தருளும் அடைக்கல மாதாவின்மீது முனிவர் பாடிய பாக்களில் தமிழ்மணங் கமழ்கின்றது. நூலிலுள்ள பாக்கள், ஆழ்வார்களின் பாணியில் அமைந்திருக்கின்றன. நெடியோன் குன்றத்தின் மீது குலசேகராழ்வார் கொண்ட காதலால், மண்ணரசையும் விண்ணரசையும் விரும்பாது அம்மலையில் ஒரு மரமாக நிற்கவும், படியாகக் கிடக்கவும், ஆருகப் பாயவும், மீனகத் திரியவும் ஆசை கொள்ளுகின்ருர்’ ஆணுத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானு ரூம் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் தேனுக் பூஞ்சோலைத் திருவேங்க டச்சுனையில் மீனுய்ப் பிறக்கும் மதியுடையேன் ஆவேனே. என்பது ஆழ்வாரின் ஆசைக்கனிகளில் ஒன்று. இத்தகைய ஆசைதான் வீரமாமுனிவரின் பாட்டிலும் காணப்படுகின்றது. தாள் அணிந்த மதிமுதலாத் தமியனும் அக் கமலத்தாள் தாங்கி லேனே கோள் அணிந்த குழலணிதார் குடைவண்டாப் புகழ்பாடி மதுவுண் ணேனே வாள் அணிந்த வினைப்படைவெல் வலிசிங்கம் ஈன்ற ஒரு மானுய் வந்தாள் கேள்அணிந்த காவல்நல்லூர்க் கிளர்புனத்துப் பசும்புல்லாய்க் கிடவேன் நானுே.

  • 3. பெருமாள் திருமொழி: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: Jrs.677–687