பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு 1. 44 என்பது வீர மாமுனிவரின் ஆசை. வேங்கட மலையில் எவ்வாறேனும் இருந்து வாழ விரும்பிய ஆழ்வாரைப் போலவே, வீரமாமுனிவரும் திருக்காவலூர்ச் சோலையில் புல்லாக நிற்கவும், வண்டாகத்திரிந்து மதுவுண்டு மரியம் மையின் மீது கீதம் பாடவும் விரும்புகின் ருர். இன்னும் இவர் கிறித்தவசமயத்துறையில் தொண்டாற்றிய போர்த்துக்கீசிய நாட்டு நங்கையார் கித்தேரி அம்மாள் மீது 'கித்தேரியம்மாள் அம்மானை' என்ற ஒரு பிரபந்த நூலையும் இயற்றியுள்ளார். நம் நாட்டில் பிறந்து கிறித்தவ சமயத்தில் புகுந்து சமயப் பணியாற்றியவர்களுள் நெல்லை நாட்டில் ரெட்டியார் பட்டி என்ற சிற்றுாரில் ேத ன் றி ய அரிகிருட்டின்ப்பிள்ளை என்ற புலவர்மணி தலைசிறந்தவர். அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக வி.எ க் கி ய திருப்பாடற்கடல்நாதன் க வி ர | ய ரி - ம் முறையாகத் தமிழ்க் கற்றவர். ஆங்கிலத்தில் ஜான் பணியன் என்பார் Øusbju The Pilgirim's Progress (urgåsfossfsir apsir னேற்றம்)என்ற நூலின் கதையைத் தமிழில் இரட்சண்ய யாத்திரிகம்'என்ற காவியமாக யாத்தார். பெருங்காப்பியம் தன்னிகரில்லாத் தலைவனுடையதாய் இருக்கவேண்டு மென்பது பெருங்காப்பிய இலக்கணம். பாவச்சேற்றில் படிந்து வாடிக் கவலையுற்ற உயிர் ஆன்ம இரட்சகரான கிறித்துப் பெருமான் அருளால் நிரந்தரத் தன்மையைப் பெற்றுப் போரானந்தம் அடைந்த வரலாற்றை வி ரி த் து ைர க்கு ம் இ க் கா வி ய ம் கிறித்துப் பெருமானையே தன்னேரில்லாத் தலைவனுகக்கொண்டு இலங்குகின்றது. சுமார் நாலாயிரம் பாடல்களில் அமைந்த இக்காவியத்தில் கம்பனின் காம்பீரியத்தையும் கற்பனைகளையும் வண்ணங்களையும் ஆசிரியர் கையாண்டு இருப்பதைக் காணலாம். ஆனந்தசைலப் படத்திலுள்ள