பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அறிவுக்கு விருந்து பாடல்களைக் கம்பனின் இராம காதையில் நாட்டுப்படலம், ஆற்றுப் படலம் ஆகியவற்றிலுள்ள பாடல்களுடன் ஒப்பிட்டுப் படிப்பார் ஓரளவு இவ்வுண்மையை எளிதில் உணர்வர். இவர் இயற்றிய இரட்சண்ய மனேகரம்' என்ற நூல் பல தோத்திரப் பாடல்களைத் தன்னகத்தே கொண்டது. இவை இயேசு பெருமானைப்பற்றிய பாடல்கள் என்று சொல்லாவிட்டால், அவற்றைப் படிப்போர் தேவாரப் பாக்களாகவே க ரு து வ ர். இரட்சண்ய நவநீதப் படலத்திலுள்ள பாடல்கள் இறைவனது பேரின்ப வெள்ளம் பொங்கிப் பெருகி நிற்கும் நிலையினைக்கண்டு அதனைப் பருகுமாறு பரிந் தழைக்கும் தாயுமான அடிகளின் பாடல்களை நினைவுக்குக் கொண்டுவரும். கிருட்டின்ப்பிள்ளையின் காலத்துக்குப்பல்லாண்டுகள் முன்னர் இரு ந் த மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் (மாவட்ட நீதிபதியாக இருந்தவர்) அவருடைய காலத் துக்குச் சற்று முன்னர் இருந்த தஞ்சை வேதநாய சாஸ்திரியாரும் சில செய்யுள் நூல்களைச் செய்திருக் கின்றனர். இருவருமே இசைத் தமிழில் ஆர்வம் மிக்கு பல கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளனர். பராபரன் மாலை, ஞானக்கும்மி, ஆதியானந்தம் முதலியவை சாஸ்திரியார் இயற்றியவை. அவர் க | ல த் தி ல் சிறப்பாகப் பாமர மக்களிடையே வழங்கிய குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம் போன்ற பிரபந்தங்களின் பாணியில் பெத்தலேம் குறவஞ்சி என்ற குறவஞ்சி நாடகத்தையும், சென்னப் பட்டணப் பிரவேசம் என்ற நொண்டி நாடகத்தையும் இயற்றியுள்ளார். வேதநாயகம் பிள்ளை இயற்றிய நூல்களில் நீதி நூல், பெண்மதி மாலை, சர்வசமயக் கீர்த்தனம் ஆகியவை இன்றும் நம்மிடையே சிறப்பாக வழங்கி வருகின்றன.