பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு 445 தலை சிறந்த ஒரு தமிழ் வசன காவியம், நகைச் சுவை ததும்பி நிற்பது; புலவரும் பொது மக்களும் விரும்பிக் கற்கும் பெற்றி வாய்ந்தது. இந்நூலில்தான் தற்காலத் தமிழ் உரைநடை முதன் முதலாக உரு எடுத்திருக் கின்றது என்று சொல்ல வேண்டும்; நூலின் நடையில் எவ்வித விறைப்பும் இல்லை. வாக்கியங்கள் நல்ல சொற் களால் தொகுக்கப்பெற்று இலக்கியச் சுவையுடன் கருத்துக்களை நேராகத் தெளிவுபடுத்திச் செல்கின்றன. அவரது உரைநடை பின் வந்தோர்கட்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக இருந்தது என்று கூடச் சொல்லலாம். தமிழ் இலக்கணத் தொண்டர்கள்: மே னு ட் டு க் கிறித்தவ அறிஞர்களில் வீரமாமுனிவர் மட்டிலுந்தான் தமிழில் எல்லாத் துறைகளிலும் தொண்டாற்றி யுள்ளார். இவர் இலக்கணத் துறையிலும் தொண்டாற்றி அதனை வளப்படுத்தி யிருக்கின் ருர், முனிவர் தமிழ் மொழியிலுள்ள தொல்காப்பியம் முதல் நன்னுரல் ஈருக வுள்ள இலக்கண நூல்கள் அனைத்தையும் கற்று இலக்கணத்துறையில் நல்ல புலமையடைந்திருந்தார். எழுத்து, சொல், ெய | ரு ள், யாப்பு, அணி என்று ஐந்திலக்கணங்களும் அடங்கிய 'தொன் னுரல் விளக்கம்” என்ற அரியதோர் இலக்கண நூலை இயற்றினர். “அருந்தமிழ் இலக்கணம் ஐந்தையும் விரித்து விளக் கினன் வீரமாமுனியே” என்று அவர் நூலின் சிறப்புப் பாயிரம் கூறும் மேலைநாட்டுக் கருத்துக்களும் நூலில் அமைந்து அதனைச் சிறப்பிக்கின்றன. பேச்சு வழக்கிலும் நூல் வழக்கிலும் உள்ள மொழியின் வேற்றுமையை நன்கறிந்து இரண்டிற்கும் தனித்தனி இலக்கணங்களை இலத்தீன் மொழியில் எழுதினர். பேச் சுத் தமிழ் இலக்கணத்தைக் கொடுந்தமிழ் இலக்கணம் என்ற பெயரால் குறித்தார். இவ்விரண்டு நூல்களும் இப்போது