பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i46 அறிவுக்கு விருந்து ஆங்கில மொ ழி யி ல் பெயர்க்கப்பெற்றுள்ளன. தமிழில் குற்றெழுத்தையும் நெட்டெழுத்தையும் எளிதில் அறிந்து கொள்வதற்கு அவற்றின் வரிவடிவத்தைச் சிறிது மாற்றியமைத்தார். இன்றுள்ள வடிவங்கள் அவர் அமைத்தவையே. வீரமாமுனிவரை அடுத்துத் தமிழ இலக்கணத் தொண்டராக விளங்கியவர் போப் அய்யர் (Rew G, U. Pope) ஆவர். இவர் மகாவித்துவான் இராமானுச கவிராயரிடம் கல்வி கற்றவர். இன்று நாம் சிறுவர்க்கென எ ழு த ப் பட்ட போப்பையர் இலக்கணத்தைக்' கேள்விப்படத்தான் செய்கின்ருேம். இந்நூல் மூன்று பாகங்களாக உள்ளது. முதல் இரண்டு பாகங்களும் மணுக்கர் எ னி தி ல் படிக்குமாறு வினவிடையில் அமைந்தவை; மூன்ரும் பாகம் விரிவானது; இலக்கண துட்பங்களை நன்கு உணர்த்துவது. மொழி நூலறிஞர்கள் : மேனுட்டார் .ெ தா ட ர் பு ஏற்பட்ட பிறகுதான் தமிழுக்கு"மொழிநூல் துறை என்று புதியதோர் துறை ஏற்பட்டது. திராவிட மொழிகள் என்ற ஒரு தனிக்குடும்பம் இருப்பதை உலகோர் அறிவதற்கு நல்ல வாய்ப்பும் ஏற்பட்டது. இத்துறையில் உழைத்த அறிஞர்களுள் த லே சி. ற ந் த வ ர் ராபர்ட் கால்டுவெல் அய்யர் (Right Rev. Robert Caldwell) ஆவர். கால்டுவெல் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இந்தியாவில் பேசப்பட்ட மொழிகளனைத்தும் ஆரிய இனத்தைச் சார்ந்தவை என்று ஐரோப்பிய மொழி நூலறிஞர்கள் கருதி வந்தனர். நேப்பாள நாட்டில் நீண்டகாலம் உயர் அலுவலராக இருந்த டாக்டர் ஹாட்சன் (Dr Hodgson) எ ன் பார் நடு இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வழங்கி வந்த